விசா தொடர்பில் சிக்கலை எதிர்கொண்ட ஸ்பானிஷ் பத்திரிகையாளர்..நாட்டை விட்டு வெளியேற்றிய ரஷ்யா
ஸ்பெயின் பத்திரிகையாளரை நாட்டை விட்டு ரஷ்யா வெளியேற்றியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ரஷ்யாவில் எல் முண்டோ நாளிதழில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சேவியர் கோலாஸ் என்ற நபர் பத்திரிகையாளராக பணியாற்றினார்.
அவர் மாஸ்கோவில் 12 ஆண்டுகளாக பணியாற்றி வந்த நிலையில் அவரால் தனது விசாவை புதுப்பிக்க முடியவில்லை.
அவரது பணி விசா புதுப்பிக்க மறுக்கப்பட்டதாக எல் முண்டோ கூறகிறது. இதன் காரணமாக ரஷ்யா சேவியர் கோலஸை வெளியேற்றியுள்ளது.
முன்னதாக அவர் ரஷ்யாவை விட்டு வெளியேற 24 மணிநேரம் அவகாசம் அளிக்கப்பட்டதாக செய்தித்தாள் கூறுகிறது.
அத்துடன் இது பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்றும் எல் முண்டா குற்றம்சாட்டியுள்ளது.