அயோத்தி குடமுழுக்கை முன்னிட்டு தஞ்சையில் 17 ஆம் நூற்றாண்டு கோதண்டராமர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

அயோத்தி குடமுழுக்கு விழாவை முன்னிட்டு 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஸ்ரீ கோதண்டராமர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் பகுதியில் ஸ்ரீ கோதண்டராமர் கோவில் அமைந்துள்ளது. மராட்டிய மன்னர்களால் 17 நூற்றாண்டில் இந்த கோயில் ம் கட்டப்பட்டது. நேபாள மன்னரால் வழங்கப்பட்ட கண்டகிநதி சாளக்கிராமம் கல்லில் செய்யப்பட்ட ராமர் சிலை இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அயோத்தியில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு இங்குள்ள கோதண்டராமர் சுவாமிகளுக்கு பால், சந்தனம், மஞ்சள், தயிர், இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாராதனையும் காட்டப்பட்டது.
இதில் சிறப்பு அம்சமாக அயோத்தி சரயு நதியிலிருந்து புனித தீர்த்தம் எடுத்துவரப்பட்டு பிரத்தியேக தீர்த்தத்தை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. மேலும் கோவிலில் உள்ள பக்தர்களுக்கு எழுதப்பட்ட ராம நாம ஜெபத்தினை பாராயணம் செய்யப்பட்டது. பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டு தீபம் ஏற்றி வழிபட்டனர்.