காரசாரமான உருளைக்கிழங்கு குருமா ரெசிபி: ஒரு முறை செய்து பாருங்க
தேவையான பொருட்கள்
1 வெங்காயம் நறுக்கியது
¼ ஸ்பூன் மஞ்சள்
3 பச்சை மிளகாய்
1 டேபிள் ஸ்பூன் மிளகாய் பொடி
1 டேபிள் ஸ்பூன் மல்லிப் பொடி
அரை கப் தயிர்
அரை ஸ்பூன் இஞ்சி நறுக்கியது
அரை ஸ்பூன் பூண்டு நறுக்கியது
கால் ஸ்பூன் கரம் மசாலா
3 அவித்த உருளைக் கிழங்கு
உப்பு
எண்ணெய்
செய்முறை : உருளைக்கிழங்கை சிறி துண்டுகளாக வெட்டி அவித்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, வெங்காயம் சேர்த்து கிளரவும். அதில் பச்சை மிளகாய் நறுக்கியது, இஞ்சி, பூண்டு சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து அதில் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, மல்லிப் பொடி, கரம் மசாலா சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதில் தயிர், தண்ணிர் சேர்த்து கிளவும். மூடி போட்டு 7 நிமிடங்கள் மூடவும்.
தொடர்ந்து இதில் அவித்த உருளைக்கிழங்கை சேர்த்து கிளரவும். 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.