ஆன்மிக அரசியலும்… திமுக – பாஜக மோதலும்!
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற்ற அதே நாளில் (ஜன.22), தமிழ்நாட்டின் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு சம்பவங்கள் நடந்தேறின.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவைக் காண்பதற்காக காஞ்சிபுரத்தில் வைக்கப்பட்டிருந்த அகண்ட திரை அகற்றப்பட்டு, பின்னர் மீண்டும் வைக்கப்பட்டு… என சில அதிரடி சம்பவங்களும் நிகழ்ந்தன.
அயோத்தி ராமர் கோயில்
இந்த விவகாரம் சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறும் அளவுக்கு பரபரப்பின் உச்சத்துக்குச் சென்றது தமிழ்நாட்டின் நிலைமை.
ராமர் கோயில் திறப்பு விழாவை நேரலையில் காண்பதற்காக, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் திரை வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ.க நிர்வாகிகள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியைக் காண்பதற்கு வருவதாக இருந்தது. இந்த நிலையில், அங்கு வைக்கப்பட்டிருந்த அகண்ட திரையை காவல்துறையினர் அப்புறப்படுத்தியதாகப் பிரச்னை எழுந்தது.
நிகழ்ச்சியை அகண்ட திரை மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யலாம் என்று உத்தரவிட்டன. அதையடுத்து, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மீண்டும் அகண்ட திரை வைக்கப்பட்டு, நேரலை ஒளிபரப்பு நடைபெற்றது. அதன் பிறகு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ.க நிர்வாகிகள் உள்ளிட்டோர் ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்.
அதன் பின்னர், ‘அகண்ட திரையில் ஒளிபரப்பு செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது தவறு என்று பலமுறை சொல்லியும், அவர்கள் மாற்றிக்கொள்ளவில்லை. தனியார் கோயில்களில் இந்து அறநிலையத்துறை தலையிடக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் என்று உத்தரவிட்டு, இந்துக்களின் உரிமையை நிலைநாட்டியிருக்கின்றன. நீதிமன்றங்களுக்கும், ராமபிரானுக்கும் நன்றி’ என்றார் நிர்மலா சீதாராமன்.