ஸ்போர்ட்ஸ் ரக கவாஸாகி நின்ஜா 500 அறிமுக விபரம்
இந்திய சந்தையில் தொடர்ந்து பிரீமியம் பைக்குகளை வெளியிட்டு வரும் கவாஸாகி அடுத்த டீசரை வெளியிட்டதன் மூலம் நின்ஜா 500 ஸ்போர்ட்ஸ் பைக்கின் வருகையை உறுதி செய்துள்ள நிலையில் அனைத்து முக்கிய விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
EICMA 2023 அரங்கில் வந்த நின்ஜா 500 மற்றும் Z500 மாடலில் 451cc பேரலல் ட்வீன் லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 45.4hp பவர் 9000rpm-லும் 42.6Nm டார்க் ஆனது 6000rpm-ல் உற்பத்தி செய்கின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.
டெர்லிஸ் ஃபிரேம் பெற்ற மாடலில் டாப் SE மாடலில் புளூடூத் இணைப்புடன் பொருத்தப்பட்ட TFT டிஸ்ப்ளே மற்றும் USB-C சார்ஜிங் போர்ட் மற்றும் கீலெஸ் வசதி போன்றவற்றைக் கொண்டுள்ளது. எல்இடி ஹெட்லைட் செட்டப் கொடுக்கப்பட்டு மிக ஸ்போர்ட்டிவான தோற்றத்தை கொண்டதாக விளங்குகின்றது.
இருபக்கத்திலும் 17 அங்குல அலாய் வீல் பெற்ற நின்ஜா 500 மாடல் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் ஆகியவற்றை பெற்று பிரேக்குகள் 310 மிமீ டிஸ்க் மற்றும் 220 மிமீ டிஸ்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.