சிறுநீரக கற்கள் பற்றி பரவும் வதந்திகள்.. உண்மை தெரியாவிட்டால் ஆபத்து
மேலும் உடல் திரவங்களின் சமநிலையையும் இது பராமரிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கெட்ட பொருட்களை சிறுநீரின் மூலம் அகற்றி, பல நோய்களின் அபாயத்தை தானாகவே குறைக்கின்றன. ஆனால் சில நேரங்களில், தாதுக்களின் குவிப்பு சிறுநீரகத்தில் கற்கள் உருவாக காரணம் ஆகின்றது. இது சிறுநீரக கல் (Kidney Stone) என்று அழைக்கப்படுகிறது. இந்த கற்கள் உருவாகும் நபருக்கு கடுமையான வலி, சிறுநீரில் இரத்தம் மற்றும் தொற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் ஆகியவை அதிகரிக்கின்றன.
சிறுநீரக கற்கள்: வழக்கமாக பரப்பப்படும் வதந்திகள் (Myths About Kidney Stone)
சிறுநீரக கற்கள் உருவாக காரணம் என்ன? இது மிகவும் ஆபத்தானதா? சிறுநீரக கற்கள் உருவானால் எதை சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது? இப்படி பல கேள்விகள் நமக்கு இருக்கும். இதைப் பற்றி பல கட்டுக்கதைகளும் பரப்பப்படுகின்றன. இவை குழப்பத்தை உருவாக்குவது மட்டுமல்லாமல் நிலைமையை மேலும் ஆபத்தானதாகவும் மாற்றும். சிறுநீரக கற்கள் தொடர்பாக வழக்கமாக பரப்பப்படும் வதந்திகள் பற்றியும் அவை தொடர்பான உண்மைகள் பற்றியும் இந்த பதிவில் காணலாம்.
சிறுநீரக கற்கள்: வதந்திகள் மற்றும் உண்மைகள் (Myths and Facts about Kidney Stones)
கட்டுக்கதை: சிறுநீரக கற்களுக்கு சிகிச்சை இல்லை
உண்மை: சிறுநீரக கற்கள் உருவானவுடன் மீண்டும் வரலாம் என்றாலும், உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் மாற்றங்களைச் செய்வதன் மூலம் ஆபத்தை குறைக்கலாம். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, உப்பு உட்கொள்ளலைக் குறைப்பது, கால்சியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது, தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது ஆகியவை சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தைக் குறைக்க உதவும்.
கட்டுக்கதை: பீர் குடிப்பது சிறுநீரக கற்களை நீக்குகிறது.
உண்மை: இது ஒரு ஆபத்தான வதந்தியாகும். பீரில் உள்ள ஆல்கஹால் உண்மையில் சிறுநீரக கற்கள் அபாயத்தை அதிகரிக்கும். கூடுதலாக, பீர் சிறுநீரில் கால்சியம் அளவை அதிகரிக்கலாம், இது கல் உருவாவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. ஆகையால் பீர் குடிப்பது சிறுநீரக கற்களை நீக்குகிறது என்பது உண்மைக்கு முற்றிலும் புரம்பான ஒரு கட்டுக்கதை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.