இலங்கையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி: வெற்றியாளருக்கு காத்திருக்கும் பரிசு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது.
இலங்கையில் ஜல்லிக்கட்டு
தமிழர்கள் திருநாளாம் தை பொங்கலை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும்.
தமிழ்நாட்டில் அலங்காநல்லூர், அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக புகழ்பெற்றது.
#WATCH | Sri Lanka’s first Jallikattu event is underway at Trincomalee. 200 bulls are expected to participate here. More than 100 police personnel are deployed for security.
(Drone visuals) pic.twitter.com/DIJlFRhdoD
— ANI (@ANI) January 6, 2024
அத்துடன் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலும் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்கள் அதிகம் வாழும் இலங்கையில் இலங்கையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கத்தின் வழிகாட்டுதலின் படி, இலங்கையின் திருகோணமலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி ஆரம்பிக்கப்பட்டது.
#WATCH | Sri Lanka’s first Jallikattu event began at Trincomalee today. 200 bulls are expected to participate here. More than 100 police personnel are deployed for security.
The event was inaugurated by Senthil Thondaman, the Governor of Eastern Province and Malaysian MP M.… pic.twitter.com/zkxtzwINB2
— ANI (@ANI) January 6, 2024
இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் முயற்சியில் இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
200 காளைகள் சீறிய பாய இருக்கும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை மலேசிய எம்.பி மற்றும் ஆளுநர் செந்தில் தொண்டமான் தொடங்கி வைத்தனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிப் பெறும் சிறந்த மாடுகளுக்கும், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் 1 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.