Srividya love story: கமல் கைமாற்றிய காதல்.. காதல் வெறியில் இயேசுவை பற்றிய ஸ்ரீவித்யா.. நெஞ்சில் குத்திக்கிழித்த துரோகம்!

இப்படி ஒரு சோகமான காலகட்டத்தில் அவர் இருக்கும் பொழுது தான், அவரை அணைக்கும் கையாக வந்தார் ஜார்ஜ் தாமஸ். அவர் ஸ்ரீ வித்யா நடித்த மலையாள படம் ஒன்றில் உதவி இயக்குநராகவும், இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றினார்.

பிரபல நடிகை ஸ்ரீவித்யா வாழ்க்கையில், அவர் எதிர்கொண்ட காதல்கள் குறித்து டூரிங் டாக்கீஸ் சேனலில் பிரபல நடிகர் சித்ரா லட்சுமணன் பேசி இருக்கிறார்

அவர் பேசும் போது, “கமலை மிகவும் தீவிரமாக காதலித்துக் கொண்டிருந்த ஸ்ரீவித்யா, அவரையே திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்திருந்தார். ஆனால் இதற்கு இடையில் கமல் வாணி கணபதியை காதலிக்க ஆரம்பித்து விட்டார். இதனை கேட்டு நொறுங்கி போனார் ஸ்ரீவித்யா.

இப்படி ஒரு சோகமான காலகட்டத்தில் அவர் இருக்கும் பொழுது தான், அவரை அணைக்கும் கையாக வந்தார் ஜார்ஜ் தாமஸ். அவர் ஸ்ரீ வித்யா நடித்த மலையாள படம் ஒன்றில் உதவி இயக்குநராகவும், இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றினார்.

ஏற்கனவே துயரத்தில் இருந்த ஸ்ரீவித்யாவிடம் ஜார்ஜ் தாமஸ் அன்பான வார்த்தைகளை சொல்லி ஆறுதல் படுத்தினார். அந்த ஆறுதல் ஸ்ரீவித்யாவிற்கு ஜார்ஜ் மீது காதலை உருவாக்கியது. இந்த ஜார்ஜ் யார்? அவரின் பின்னணி என்ன என்பது குறித்து ஸ்ரீவித்யா துளி கூட யோசிக்கவில்லை. காரணம் அவர் அப்படியான ஒரு சூழ்நிலையில் இருந்தார். இந்த நிலையில் தான் ஜார்ஜையே கல்யாணம் செய்து கொள்ளலாம் என்ற ஒரு அதிரடியான முடிவை அவர் எடுத்த.

இந்த முடிவை கேட்டு அதிர்ச்சிக்குள்ளான அவரது குடும்பம் திரை பிரபலங்கள், நண்பர்கள் என அனைவரும் எதிர்த்தனர். ஆனால் ஸ்ரீவித்யா எதையுமே காதில் வாங்கிக் கொள்ளவில்லை. கடைசியாக சிறிது காலமாவது கல்யாணத்தை ஒத்திபோடுமாறு ஸ்ரீவித்யாவிடம் கோரிக்கை வைத்தார்கள். ஸ்ரீவித்யாவும் எதற்கும் செவி சாய்க்க வரவில்லை.

காதல் போதையில் காதலனை கரம்பிடிக்க, கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார் ஸ்ரீவித்யா. 1978 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் ஜார்ஜை திருமணம் செய்து கொண்டார். ஆனால் கல்யாணம் முடிந்த சில மாதங்களிலேயே ஜார்ஜ் உடைய உண்மையான முகம் வெளிப்பட்டு விட்டது. அதை கண்டுபிடிக்கும் முன்னரே ஸ்ரீ வித்யாவின் சொத்துக்கள் அனைத்தும் சூறையாடப்பட்டு விட்டது. அதன் விளைவாக அவரை விவாகரத்து செய்ய முடிவையும் ஸ்ரீ வித்யா எடுத்தார். அந்த நேரத்தில் கூட, ஸ்ரீவித்யா கஷ்டப்பட்டு உழைத்து கட்டிய வீட்டை ஜார்ஜ் கொடுக்கவில்லை.” என்று பேசினார் .

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *