அம்பாசிடர் தொடங்கி சீரா வரை.. இந்த கார்கள் எல்லாம் கம்பேக் கொடுக்க போகுதா! கொரியா, சீனா எல்லாரும் ஓரமா போங்க!

இந்தியர்கள் தீவிர வாகன காதலர்கள் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இதனால்தான் உலகின் மிகப் பெரிய வாகன சந்தையாக இந்தியா இருக்கின்றது. இத்தகைய மகுடத்தை சூடியிருப்பதனாலேயே இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும் வாகனத்துறைக் காட்சியளிக்கின்றது. இத்தகைய வாகனத்துறையை அலங்கரிக்கும் விதமாக தற்போது நூற்றுக் கணக்கான வாகனங்கள் நாட்டில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

ஆனாலும், இந்தியர்கள் ஒரு சிலரின் தேடலில் கடந்த கால கார் மாடல்கள் சில இடம்பிடித்திருக்கின்றன. அவ்வாறு இருந்த கார் மாடல்களில் ஒன்றே டாடா சஃபாரி (Tata Safari) ஆகும். இதனை புதிய அவதாரத்தில் தற்போது டாடா மோட்டார்ஸ் (Tata Motors) இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இதைபோலவே இன்னும் ஒரு சில பழைய கார் மாடல்கள் இந்தியர்களின் எதிர்பார்ப்பில் இடம்பிடித்திருக்கின்றன. அவற்றில் சில வெகுவிரைவில் டாடா சஃபாரியை போல மீண்டும் புதிய அவதாரத்தில் விற்பனைக்கு வர இருக்கின்றன. அந்த வகையில் அதிரடியாக கம்பேக் (மறு வருகை) கொடுக்க இருக்கும் டாப் ஐந்து கார் மாடல்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

டாடா சீரா (Tata Sierra): டாடா மோட்டார்ஸ் (Tata Motors) கடந்த காலத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருந்த சூப்பரான கார் மாடல்களில் சீராவும் ஒன்றாகும். இதனை சஃபாரியை போலவே விரைவில் புதிய அவதாரத்தில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது, டாடா மோட்டார்ஸ்.

இதை உறுதிப்படுத்தும் விதமாக டாடா மோட்டார்ஸ் புதுமுக சீராவின் கான்செப்ட் மாடலை வெளியீடு செய்தது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் சில ஆண்டுகளுக்கு முன்னரே இந்த சம்பவத்தை டாடா செய்துவிட்டது. எனவே இதன் வருகைக்கான நாள் வெகுதூரத்தில் இல்லை என்பதை நம்மால் அறிய முடிகின்றது.

இதற்காகவே இந்தியர்கள் சிலர் வெறிகொண்டு காத்துக் கொண்டிருக்கின்றனர். லக்சூரி கார்களுக்கு இணையான சொகுசு வசதியை இந்த காரில் பெற முடியும் என்பதால் இந்திய அரசியல்வாதிகள் சிலரின் எதிர்பார்ப்பாகவும் இந்த கார் இருக்கலாம். டாடா மோட்டார்ஸ் சீரா-வை எலெக்ட்ரிக் வெர்ஷனில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

மின்சார வெர்ஷனில் மட்டுமல்ல ஐசிஇ வெர்ஷனிலும் (எரிபொருளில் இயங்கும் திறன் கொண்ட காராகவும்) சீராவை டாடா விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்த காரின் அறிமுகம் 2025 ஆம் ஆண்டிற்குள் அரங்கேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதன் துள்ளியமான வருகை நாள் பற்றிய விபரத்தை இன்னும் டாடா மோட்டார்ஸ் இறுதி செய்யவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது.

மஹிந்திரா அர்மதா (தார் 5 டோர் வெர்ஷன்) (Mahindra Armada – Thar 5-door): மஹிந்திரா நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக தார் இருக்கின்றது. தற்போது இந்த கார் மாடலின் 3 டோர் வெர்ஷனே இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. விரைவில் இதன் 5 டோர் வெர்ஷனையும் மஹிந்திரா இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்க இருக்கின்றது.

ஏற்கனவே இந்த கார் மாடலின் சோதனை ஓட்டத்தை மஹிந்திரா நிறுவனம் நாட்டில் தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரையே மஹிந்திரா நிறுவனம் அர்மதா எனும் பெயரில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அர்மதா நிறுவனத்தின் புகழ்பெற்ற பெயர் ஆகும்.

ஜீப் வகை எஸ்யூவி ரக காராக இது கடந்த காலங்களில் இந்தியாவில் விற்பனையில் இருந்தது. 1991 முதல் 2001 ஆம் ஆண்டு வரை அர்மதா பெயர் கொண்ட எஸ்யூவி கார் விற்பனையில் இருந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் மாடலின் அறிமுகம் 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அரங்கேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரெனால்ட் டஸ்டர் (Renault Duster): ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருந்த சூப்பரான எஸ்யூவி ரக கார் மாடல்களில் ஒன்றே டஸ்டர் ஆகும். இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற கார் மடாலகாவும் இது இருந்தது. ஆனால், போட்டி நிறுவனங்களின் புதுமுக எஸ்யூவி ரக கார்களின் வருகையால் லேசாக இந்த கார் பின்னடைவைச் சந்தித்து. இந்த நிலையிலேயே டஸ்டரை விற்பனையில் இருந்து ரெனால்ட் அகற்றியது.

இந்த நிலையிலேயே தற்போது இதன் புதிய தலைமுறை வெர்ஷனை ரெனால்ட் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக அறிவித்து இருக்கின்றது. ஏற்கனவே உலக சந்தையில் இந்த வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. ஐரோப்பிய சந்தையில் நடப்பாண்டில் விற்பனைக்கு வந்துவிடும் என கூறப்படுகின்றது. ஆனால், இந்தியாவில் 2025 ஆம் ஆண்டிலேயே இந்த கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அம்பாசிடர் (Ambassador): இந்தியர்களின் ஃபேவரிட் கார் மாடலென அம்பாசிடரை கூறலாம். கடந்த காலங்களில் மாநிலங்களின் முதலமைச்சர்களே இந்த காரைதான் பயன்படுத்தி வந்தனர். இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க கார் மாடலே அம்பாசிடர் ஆகும். வெகுவிரைவில் இந்த காரும் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. அது மின்சார வெர்ஷனில் விற்பனைக்கு வர இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், இதன் வருகை எப்போது அமையும் என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது.

கான்டெஸ்ஸா (Contessa): எஸ்ஜி கார்பரேட் மொபிலிட்டி நிறுவனத்தின் கீழ் விற்பனைச் செய்யப்பட்ட ஓர் கார் மாடலே கான்டெஸ்ஸா ஆகும். மிகவும் கவர்ச்சியான தோற்றம் கொண்ட கார் மாடல் இதுவாகும். கட்டுமஸ்தான உடல்வாகைக் கொண்ட கார் மாடலாகவும் இது காட்சியளிக்கின்றது. இத்தகைய கார் மாடலே வெகு விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *