அஞ்சல் நிலையங்களில் தங்கப் பத்திரம் விற்பனை இன்றுடன் நிறைவு
அஞ்சல்துறை சார்பில், தங்கப் பத்திர விற்பனை அஞ்சல் நிலையங்களில் இன்றுடன் நிறைவடை கிறது.
மத்திய அரசு தங்கப் பத்திர திட்டத்தை ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிடுகிறது.
இதன் ஒருபகுதியாக, அஞ்சல்துறை சார்பில், தங்கப் பத்திர விற்பனை அஞ்சல் நிலையங்களில் பிப்.12-ம் தேதி தொடங்கி பிப்.16-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தங்கப் பத்திரவிற்பனை அஞ்சல் நிலையங்களில் இன்றுடன் (பிப்.16) நிறைவடைகிறது. இது பத்திரம் வடிவில் இருப்பதால் பாதுகாப்பாக இருக்கும். தங்கத்தின் முதலீடு செய்ய விரும்புவோருக்கு மிகச்சிறந்த வாய்ப்பாக இருக்கும்.
ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6,263 ஆகும். ஒருவர் ஒரு நிதியாண்டுக்கு அதிகபட்சம் 4 கிலோ வரை வாங்கலாம் பொதுமக்கள்,அறக்கட்ட ளைகள், பல்கலைக்கழகங்கள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவை இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சல் நிலையத்தை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.