வருடம் முழுவதும் ஃபிரெஷா இருக்க ஸ்ட்ராபெர்ரி பழங்களை ஃபிரிட்ஜில் சேமிப்பது எப்படி? செஃப் வீடியோ

ஸ்ட்ராபெர்ரி பழத்தை ஆண்டு முழுவதும் ருசிக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?

செஃப் நேஹா தீபக் ஷா, இன்ஸ்டாகிராமில் ஸ்ட்ராபெர்ரி பழங்களை எப்படி சேமிப்பது என்று பகிர்ந்துள்ளார். நீங்கள் ஸ்ட்ராபெரி பிரியர் என்றால், அதன் வழக்கமான பருவத்திற்கு அப்பால் இந்த புளிப்பு சுவையை அனுபவிக்க ஆர்வமாக இருந்தால், இந்த எளிய மற்றும் பயனுள்ள ஹேக் கண்டிப்பாக முயற்சிக்க வேண்டும்.

பழங்களைப் பொறுத்து, சில பழங்கள் உறைந்த நிலையில் அவற்றின் அதிகபட்ச ஊட்டச்சத்துக்களை வைத்திருக்கின்றன, சில புதியதாக உட்கொள்ளும் போது அவற்றைக் கொண்டிருக்கும். “நீங்கள் பழங்களை உடனடியாக உறைய வைத்தால், அதன் ஊட்டச்சத்து விவரம் ஒரு புதிய பழத்தில் இருப்பதைப் போலவே இருக்கும், ”என்று மருத்துவ உணவியல் நிபுணர் கரிமா கோயல் தெரிவித்தார்.

முதலாவதாக, உறைந்த பழம் அதன் ஊட்டச்சத்து மதிப்பின் பெரும்பகுதியைத் தக்க வைத்துக் கொள்கிறது, ஏனெனில் இது பொதுவாக அதன் உச்ச பழுத்த நிலையில் உறைந்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்களில் பூட்டப்படுகிறது.

இரண்டாவதாக, உறைந்த பழங்கள் நீண்ட ஆயுளைக் கொண்டிருக்கின்றன, கெட்டுப்போகும் மற்றும் உணவு வீணாகும் அபாயத்தைக் குறைக்கின்றன. இது வெர்சட்டைல். ஸ்மூத்திஸ், இனிப்புகள் அல்லது தயிர், ஓட்மீல் ஆகியவற்றில் டாப்பிங்ஸாக பயன்படுத்தப்படலாம், என்று டாக்டர் சர்மா கூறினார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *