டிஆர்எஸில் தவறு நிகழ்ந்ததாக புலம்பிய ஸ்டோக்ஸ்.. தக்க பதிலடி தந்த தினேஷ் கார்த்திக்.. 2 விசயம் காரணம்

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வென்று தொடரை சமன் செய்திருக்கிறது. இந்த நிலையில் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ், டிஆர்எஸ் முடிவில் இங்கிலாந்து அணிக்கு தவறான ஒரு முடிவு அறிவிக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் இரண்டாவது இன்னிங்ஸில் ஜாக் கிராலி எல்பிடபிள்யூ ஆனதாக தவறான முறையில் டி ஆர் எஸ் கிராபிக்ஸ் காட்டியதாக பென் ஸ்டோக்ஸ் சாடியிருந்தார். இதற்கு பதிலடி தந்துள்ள தினேஷ் கார்த்திக் தொழில்நுட்பத்தை சந்தேகப்படத் தேவையில்லை என்று கூறி இருக்கிறார்.

இது குறித்து தினேஷ் கார்த்திக் அளித்துள்ள விளக்கத்தில் குல்தீப் போன்ற ஒரு வீரர் 80 கிலோ மீட்டர் வேகத்தில் பந்தை வீசும் போது அவருடைய பந்து எதிர்பார்த்தது போல் நன்றாக திரும்பும். ஏனென்றால் அவர் காற்றில் பந்தை மெதுவாக வீசுகிறார். ஆனால் ஜாக் கிராலிக்கு வீசிய பந்தில் அவர் 86 கிலோமீட்டர் வேகத்தில் வீசினார். இதன் மூலம் பந்து கொஞ்சம் வேகமாக காற்றில் சென்றது.

இதனால் எதிர்பார்த்த அளவு பந்து திரும்பவில்லை. அதனால்தான் ஜாக்கிராலி விக்கெட்டில் மிகப்பெரிய தாக்கம் ஏற்பட்டது. அனைவரும் எதிர்பார்த்தது போல் பந்து திரும்பாமல் ஸ்டெம்பை தாக்கியது. ஜாக்கிராலி விக்கெட்டுக்கு பின் இதுதான் நடந்தது. எனவே தொழில்நுட்பத்தை குறித்து யாரும் சந்தேகப்படத் தேவையில்லை.

மேலும் ரோகித் சர்மாவின் ஒரு கேட்ச் ஆட்டத்தையே மாற்றியது. இதேபோன்று ஸ்ரேயாஸ் ஐயர் ரன் அவுட் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பென் ஸ்டோக்ஸ் ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் மிகவும் சாதாரணமாக ரன் ஓடினார். ஆனால் ஸ்ரேயாஸ், அந்த நொடியை சிறப்பாக பயன்படுத்தி விக்கெட்டை எடுத்தார்.

இதுபோன்ற திறமை ஒவ்வொரு வீரருக்கும் இருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தினேஷ் கார்த்திக் கூறினார்.தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 15ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி இன்று அல்லது நாளையோ அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் விராட் கோலி முகமது சிராஜ் போன்ற முக்கிய வீரர்கள் அணிக்கு திரும்புவார்கள்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *