சாலை ஓரத்தில் லாரியை நிறுத்தி தொழுகை: காவல் துறையினா் அதிரடி நடவடிக்கை!
குஜராத்தில் பிரதான சாலையின் ஓரத்தில் லாரியை நிறுத்திவிட்டு தொழுகை நடத்திய ஓட்டுனரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து காவல் துறை சார்பில் தெரிவித்திருப்பதாவது, குஜராத், பாலன்பூர் நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடத்தில் போக்குவரத்து அதிகமாக இருக்கும் நேரத்தில் இந்த சம்பவத்தை ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் வீடியோ அதிக அளவு பகிரப்பட்டது.
மேலும் அனுமதிக்க படாத இடத்தில் ஓட்டுனர் லாரியை நிறுத்தியதாகவும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இது குறித்து விசாரணை நடத்தி ஓட்டுநர் பசல் கான் (வயது 37) மீது பொது வழியில் அபாயத்தை ஏற்படுத்துதல், அரசு பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.