Story Of Song : 10 மணிக்கு அழைத்த பாரதிராஜா.. அரைமணி நேரத்தில் உருவான வான் மேகங்களே பாடல்!
புதிய வார்ப்புகள் படத்தில் இடம்பெற்ற வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள் பாடல் உருவான கதை குறித்து இதில் காண்போம்.
பாரதிராஜா இயக்கத்தில் வெளி வந்த 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து அவர் எடுத்த திரைப்படம் புதிய வார்ப்புகள். இப்படம் 1979 ஆம் ஆண்டு வெளியானது. பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாக்யராஜ், ரதி என பலரும் நடித்துள்ளனர்.
கிராமத்துக்கு ஆசிரியர் பணிக்கு பாக்கியராஜ் வருகிறார். அந்த ஊர் கோயிலில் நாதஸ்வரம் வாசிப்பவரின் மகளான ரதி, பாக்கியராஜ் இருவரும் காதலிக்கின்றனர். ஊர் நாட்டாமை ரதியை அடைய விரும்புகிறார். அதற்கு பாக்கியராஜ் இடையூறாக இருப்பதையும் உணருகிறார். பின்னர் ஒரு கொலையை செய்து அதனை பாக்கிராஜ் மீது பழி சுமத்தி ஊரைவிட்டு அனுப்புகிறார். ஊரைவிட்டுச் செல்லும் பாகியராஜ் எப்படி காதலியை கரம் பிடிக்கிறார் என்பது மீதி கதை.
இப்படத்தில் பாடல்களும் ஹிட். குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள் பாடல் உருவான கதை குறித்து இதில் காண்போம்.
“வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள்
நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை
வான் மேகங்களே..
பாலிலே பழம் விழுந்து
தேனிலே நனைந்ததம்மா
பாலிலே பழம் விழுந்து
தேனிலே நனைந்ததம்மா
பூவிலே மாலைக் கட்டி சூடுவேன் கண்ணா
கூ குக்குகூ..
குயில் பாடி வாழ்த்தும் நேரம் கண்டேன்
வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள்
தென்றலே ஆசைக் கொண்டு
தோகையை கலந்ததம்மா
தென்றலே ஆசைக் கொண்டு
தோகையை கலந்ததம்மா
தேவதை வண்ணம் கொண்ட பூவை நீ கண்ணே
வாஅம்மம்மா
நெஞ்சில் தீபம் ஏற்றும் தேகம் கண்டேன்”
இப்பாடலை கவியரசர் கண்ணதாசன் எழுதியுள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ்.ஜானகி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். மலேசியா வாசுதேவன் அவர்களை மக்கள் மனதில் நிலைநிறுத்திய பாடல்களில் முக்கியமான ஒன்று இந்தப் பாடல்