கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடுமையாகும் கட்டுப்பாடு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பொறிமுறை ஒன்றை அமைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. .

நாட்டிற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் அனைத்து நபர்களையும் அடையாளம் காணும் வகையில் எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்பு ஏற்படுத்தப்படவுள்ளது.

ஒருவர் குற்றம் செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்றால், அதை உடனடியாக இந்த எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்பு தடுக்கும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்பு
பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் நபர்களின் தகவல்கள் இந்த அமைப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கும். அத்தகைய நபர்கள் நாட்டிற்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ முயன்றால் தானாக அடையாளம் காண முடியும்.

இவ்வாறான எல்லைக் கட்டுப்பாட்டு முறைமையை வழங்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் அமெரிக்க தூதுக்குழுவுடன் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதன்போது இதற்கான இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர், ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *