பிரபல நிறுவனத்திற்கு வலு போட்டி.. Audi RS5 Avant.. அதிவிரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் – விலை என்ன தெரியுமா?

முற்றிலும் ஹைபிரிட் வகையை சேர்ந்த இந்த புதிய Audi RS5 Avant ஒரு ஸ்போர்ட் வகை வாகனமாகும். எதிர்வரும் 2025ம் ஆண்டு இந்திய சந்தையில் இந்த கார் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 2.6 V6 என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதே வண்டியில் 450hp மற்றும் 600Nm க்கு அப்பால் ஒரு திறன் கொண்ட மின்சார மோட்டார் பெரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை, ஆடியின் ​​A3, A6, A8, Q5, Q7 மற்றும் Q8 ஆகியவற்றின் TFSIe பதிப்புகள் மட்டுமே Audi இதுபோன்ற ஹைபிரிட் வகைகளை செயல்படுத்தி வருகின்றது. அதே போல ஆடியின் TFSIe செட்-அப் 3.0-லிட்டர் பெட்ரோல் டர்போசார்ஜ் செய்யப்பட்ட V6 உடன் மொத்தம் 462hp மற்றும் ஒரு 700Nm முறுக்கு மின்சார மோட்டாருக்கு இணைகிறது.

ஆனால் இந்த ரக கார் இந்திய சந்தையில் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவலை இதுவரை ஆடி வெளியிடவில்லை. ஆனால் இதன் முந்தைய வடிவமான Sportback Four Door Coupe இந்தியாவில் இப்பொது விற்பனைக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ரக கார் கடந்த 2018ம் ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த புதிய RS5 ரக கார் இந்தியாவில் வெளியாகும்போது, சுமார் 1.8 கோடிக்கும் அதிகமான விலையில் தான் அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு ஆடி தனது Audi 100 என்ற காரைத் தான் முதல் முதலில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. இப்பொது இந்தியர்கள் அதிகம் விரும்பும் ஒரு சொகுசு கார் என்ற பெயரையும் ஆடி பெற்றுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *