ராமர் கோயிலை போல ஸ்ட்ராங்! கடலுக்கு மேல பல முறை உருண்டும் பயணிகளுக்கு ஒன்னுமே ஆகல! அந்த நிறுவனத்தின் காரா இது!
மும்பை (Mumbai) நகரில் கட்டப்பட்டுள்ள அடல் சேது (Atal Setu) பாலம் சமீபத்தில் திறக்கப்பட்டது. இந்தியாவின் நீளமான கடல் பாலம் (India’s Longest Sea Bridge) என்ற பெருமையை பெற்றுள்ள அடல் சேது பாலத்தை, பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) திறந்து வைத்தார்.
மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்க் (Mumbai Trans Harbour Link – MTHL) என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்த பாலத்தின் மொத்த நீளம் (Total Length) 21.80 கிலோ மீட்டர்கள் ஆகும். இதில், 16.50 கிலோ மீட்டர்கள் கடல் மேல் கட்டப்பட்டுள்ளது. 17,843 கோடி ரூபாய் மதிப்பீட்டில் (Construction Cost), அடல் சேது பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
மும்பை மற்றும் அதன் சுற்று வட்டார மக்களுக்கு ஒரு சுற்றுலா தலம் போல மாறியுள்ள இந்த பாலத்தில், தற்போது பயங்கரமான சாலை விபத்து (Road Accident) ஒன்று நடைபெற்றுள்ளது. அனேகமாக இதுதான் அடல் சேது பாலத்தில் நடைபெற்றுள்ள முதல் சாலை விபத்து என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பயங்கரமான சாலை விபத்தின் வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், அதிவேகமாக வந்த மாருதி சுஸுகி இக்னிஸ் (Maruti Suzuki Ignis) கார் ஒன்று விபத்தில் சிக்குவதை நம்மால் பார்க்க முடிகிறது.
சாலையில் பலமுறை உருண்ட பின்னர்தான் அந்த கார் நிற்கிறது. அந்த வழியாக வந்த மற்றொரு காரின் முன் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த டேஷ்போர்டு கேமராவில், இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த வீடியோவை பார்த்த பலரும், உள்ளே இருந்தவர்களுக்கு படுகாயங்கள் ஏற்பட்டிருக்கும் என நினைத்திருக்கலாம்.
ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. மாருதி சுஸுகி இக்னிஸ் கார் விபத்தில் சிக்கியபோது அதன் உள்ளே மொத்தம் 2 பேர் இருந்துள்ளனர். அவர்கள் இருவருமே காயங்கள் எதுவும் இல்லாமல் வெளியே வந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக மாருதி சுஸுகி நிறுவன கார்களின் பாதுகாப்பு சந்தேகத்திற்குரிய ஒன்றாகவே இருக்கும்.
ஆனால் பயங்கரமான விபத்தில் சிக்கியபோதும் கூட, மாருதி சுஸுகி இக்னிஸ் கார், பயணிகளை காயமின்றி காப்பாற்றியுள்ளது. எனினும் இந்த சாலை விபத்திற்கு காரணமான மாருதி சுஸுகி இக்னிஸ் காரின் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இது குறித்த கூடுதல் விசாரணையையும் காவல் துறை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
சாலைகளில் அதிக வேகத்தில் பயணம் செய்பவர்களுக்கு இந்த விபத்து ஒரு பாடமாக அமைந்துள்ளது. எக்காரணத்தை கொண்டும் சாலைகளில் இனிமேல் அதிக வேகத்தில் பயணம் செய்ய வேண்டாம். இது உங்களுக்கு மட்டுமல்லாது, உங்களுடன் சேர்த்து சாலையை பயன்படுத்தும் மற்றவர்களுக்கும் இது பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.