சீதா ராமம் பட பாணியில் 70 ஆண்டுகள் பழமையான காதல் கடிதத்தை உரியவரிடம் சேர்க்க போராட்டம்..!
உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தனக்கு பிடித்தவர்களிடம் தங்களது காதலை பலவிதமாக காட்டி வரும் ஒரு ஸ்பெஷல் ஆன நாள்.
இந்நிலையில் இந்த அற்புதமான நாளை இன்னும் சிறப்பமாக மாற்றும் வகையில் 70 ஆண்டுகள் பழமையான காதல் கடிதம் ஒன்று அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் தான் இந்த 70 ஆண்டுகள் பழமையான காதல் கடிதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ரிக் ட்ரோஜனோவ்ஸ் என்பவர் கடந்த 2017ல் ஏலத்தில் வாங்கிய ஒரு பெட்டியில் இந்த அற்புதமான காதல் கடிதம் கிடைத்துள்ளது.சான் ஃபிரான்சிஸ்கோவில் இருந்து வந்துள்ள இக்கடிதத்தில் ‘கடந்த கால சண்டைக்காக மன்னிப்பு கேட்கிறேன். விரைவில் வந்து உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தை படித்து நெகிழ்ந்துபோன ரிக் ட்ரோஜனோவ்ஸ் இக்கடிதத்தை எப்படியாவது உரியவரிடம் சேர்க்க வேண்டும் என்ற முயற்சியில் தற்போது தீவிரமாக இறங்கியுள்ளார்.