பாரம்பரிய உடையில் மாணவ-மாணவியர்; களை கட்டிய பொங்கல் விழா!

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பாரம்பரிய உடைகளை அணிந்து பொங்கல் விழாவில் பங்கேற்றனர். தொடக்க நிகழ்ச்சியாக மாணவ மாணவர்கள் பொங்கல் வைக்க மாணவிகளை விட மாணவர்களே சிறப்பாக பொங்கல் வைத்து பரிசை தட்டி சென்றனர்.

மேலும் பாரம்பரிய கலைகளான கோலம் போடுதல், கைவினைப்பொருட்கள் செய்தல், பறையடித்தல், சிலம்பாட்டம், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், பம்பரம் விடுதல், பல்லாங்குழி ஆட்டம், நூறாங்குச்சி, ஐந்துகால் ஆட்டம், அம்மியில் பொங்கல் வைத்தல் , உலக்கையில் அரிசி குத்தல், மருதாணி வைத்தல், பூ கட்டுதல், நாட்டுப்புற பாட்டு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

இதேபோல கிராமிய ஆடை அலங்காரப்போட்டி நடத்தப்பட்டு, அழகிய தமிழ் மகன் மற்றும் அழகிய தமிழ் மகள் பட்டங்களுக்கு மாணவ மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இறுதியா டி.ஜே.(“DJ” )நிகழ்ச்சியும் ஜமாப்பும் கல்லூரி வளாகத்தில் அறங்கேற புளுதி கிளப்ப மாணவ மாணவிகள் ஆட ஆரம்பித்தனர். சினிமா பாடலுக்கு ஏற்றவாறு மாணவ மாணவிகள் நடனம் ஆட பொங்கல் விழா களைகட்டியது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *