Subramanian Swamy – PM Modi : “மனைவியை நடத்திய விதம்.. ராமரை பின்பற்றாத பிரதமர் மோடி” வெளுத்து வாங்கிய சுப்பிரமணியன் சுவாமி
அயோத்தி விவகாரம் தொடர் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
அயோத்தியில் மசூதி இருந்த நிலமானது, பகவான் ராம் லல்லாவுக்கு (குழந்தை ராமர் சிலை) சொந்தம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இடிக்கப்பட்ட மசூதிக்கு பதிலாக இஸ்லாமியர்களுக்கு மாற்றாக ஐந்து ஏக்கர் நிலத்தை ஒதுக்க உத்தரபிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, ராமர் கோயில் வேகமாக கட்டப்பட்டு வருகிறது.
ராமர் கோயில் திறப்பை முன்னிட்டு அயோத்தியில் கோலாகலம்:
இதற்கிடையே, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. இன்னும் சற்று நேரத்தில் ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை ராமர் கோயில் அறக்கட்டளை அழைத்துள்ளது.
கோயில் திறப்பு விழாவில் கூடுதலாக 7,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அரசியல் கட்சி தலைவர்கள், இந்து மத தலைவர்களை தவிர, அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்களும் திறப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார்கள்.
ராமர் கோயில் திறப்பால் ஒட்டுமொத்த அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளதோடு, உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு பல மாநில அரசுகளும் இன்று விடுமுறையை அறிவித்துள்ளன.
பிரதமர் மோடியை வெளுத்து வாங்கிய சுப்பிரமணியன் சுவாமி:
இந்த நிலையில், ராமர் கோயில் விவகாரத்தை முன்வைத்து பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மோடியை காட்டமாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் குறிப்பிடுகையில், “சுயநல காரணங்களுக்காக பிரான பிரதிஷ்டை விழாவில் பிரதமர் மோடி ஈடுபடுகிறார். ராமர் கோயில் பூஜையை பொறுத்தவரையில் அதில் கலந்து கொள்வதில் பிரதமர் மோடிக்கு அந்தஸ்து இல்லை.