இப்படியொரு கண்டிஷனா..? அனந்த் அம்பானி – ராதிகா கறாராக போட்ட உத்தரவு..!
அனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்துக்கு முந்தைய விழாக்கள், மணமகனின் விலங்குகள் மீதான அன்பை பிரதிபலிக்கும் வகையில், அனந்த் அம்பானி உருவாக்கிய வனந்தரா-வில் மரங்கள் விலங்குகளுக்கு மத்தியில் நடக்கிறது.
திருமணத்துக்கு முந்தைய விழாக்களில் கலந்து கொள்ளும் சில விருந்தினர்களும் வந்தாராவுக்கு வருகை தந்தனர். சனிக்கிழமை நிகழ்ச்சி நிரல் ‘எ வாக் ஆன் தி வைல்ட்சைடு’ என்ற தீமீல் நடைபெறும்.
வந்தாராவில் உள்ள விலங்குகள் மீட்பு மையத்தின் சுற்றுப்பயணம், வெளிப்புற வசதியாக இருப்பதால், விருந்தினர்கள் வசதியான காலணிகளை அணியுமாறு முன்கூட்டியே அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
விழாவுக்கு வந்த விருந்தினர்களுக்கு ஒரு பரிசுப் பெட்டியுடன் சேர்த்து கையால் எழுதப்பட்ட குறிப்பையும் தந்துள்ளனர். அதில், அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் தங்கள் திருமணத்துக்கு முந்தைய விழாக்களில் பங்கேற்றதற்கு நன்றி தெரிவித்தனர்.
இருப்பினும் விருந்தினர்கள் விலங்குகளைச் சுற்றிப் படம் எடுப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். இந்த நிகழ்வுகளில் நீங்கள் புகைப்படம் எடுப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால் நிகழ்ச்சியை முழுமையாக ரசிக்கவும், அனுபவிக்கவும், உணவுகளை சுவைக்கவும், போன் பயன்படுத்துவதையும், போட்டோ எடுப்பதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
இதேபோல் நிகழ்ச்சியின் முக்கியமான தருணங்கள் அனைத்தையும், நிகழ்வுக்குப் பிறகு உங்களுடன் பகிர்ந்து கொள்வதை நாங்கள் உறுதி செய்கிறோம் என தெரிவித்துள்ளனர்.
இதேபோல் விலங்குகளைச் சுற்றி புகைப்படங்கள் அல்லது வீடியோ எடுப்பதைத் தவிர்க்கவும். மனிதர்கள் மற்றும் விலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விலங்குகள் உள்ள அனைத்து இடத்திலும் புகைப்படம் எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. உங்கள் புரிதலுக்கும் ஒத்துழைப்பிற்கும் நன்றி என ராதிகா மற்றும் அனந்த் குறிப்பில் கையொப்பமிடப்பட்டிருந்தனர்.
வந்தாரா என்பது அனந்த் அம்பானியின் பேரார்வம் கொண்ட விலங்குகள் காப்பகமாகும். வந்தாரா முயற்சியின் கீழ், ஜாம்நகரில் விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் திறக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸின் ஜாம்நகர் சுத்திகரிப்பு வளாகத்தின் கிரீன் பெல்ட்டில் உள்ள 3,000 ஏக்கர் வசதியில் யானைகள், சிறுத்தைகள், சிங்கங்கள், முதலைகள் மற்றும் பல வகையான பறவைகள் உட்பட நூற்றுக்கணக்கான விலங்குகள் உள்ளன.
அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் மூன்று நாள் திருமணத்துக்கு முந்தைய கோலாகலத்தில் விருந்தினர்கள் குடும்பத்தின் ஜாம்நகர் தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள விலங்குகளின் புகைப்படங்களையோ வீடியோக்களையோ எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தங்கள் இளைய மகன் அனந்த் அம்பானியின் ஜூலை திருமணத்துக்கு முன்பு, ஜாம்நகரில் சில உயர்மட்ட விருந்தினர்களை நீதாவும் முகேஷ் அம்பானியும் வரவேற்கின்றனர். திருமணத்துக்கு முந்தைய விழாக்களில் பில் கேட்ஸ், மார்க் ஜுக்கர்பெர்க், ஷாருக்கான், ராணி முகர்ஜி, அமீர்கான் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.