உக்ரைனில் திடீர் குண்டு மழை.. நேரம் பார்த்து அடித்த ரஷ்யா.. திடீர் தாக்குதலுக்கு இதுதான் காரணமா..?

வெள்ளிக்கிழமை உக்ரைன் மீது ரஷ்யா தனது மிகப்பெரிய வான்வழித் தாக்குதலைக் நடத்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் மூலம் 31 உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டனர், 160 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வான்வழி தாக்குதல் மூலம் உக்ரைன் நாடு முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளைத் தாக்கப்பட்டு கடுமையாக சேதங்கள் ஏற்பட்டு உள்ளது என உக்ரைன் அரசு தரப்பில் கூறப்பட்டு உள்ளது. உக்ரைன் வெளியிட்டுள்ள தரவுகள் படி ரஷ்யா சுமார் 87 க்ரூஸ் மிசைல் மற்றும் 27

டிரோன் மூலம் சுமார் 158 வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும். இரு நாடுகள் மத்தியிலான போரில் இது தான் மிகப் பெரிய வான்வழித் தாக்குதல் என்றும் 18 மூலோபாய குண்டுவீச்சு விமானங்களில் ஈடுபட்டதாகவும் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ருஸ்டெம் உமெரோவ் கூறினார். நேட்டோ உறுப்பினரான போலந்து கூறுகையில், ரஷ்ய ஏவுகணை ஒன்று அதன் வான்வெளியில் சுமார் 40 கி.மீ தூரம் பறந்து, வெறும் மூன்று

நிமிடங்களுக்குள் உக்ரைனுக்குத் நுழைந்தது. ஆனால் ரஷ்ய தரப்பில் அத்தகைய ஏவுகணைகள் உக்ரைன்-க்குள் நுழையவில்லை என்று கூறி, குற்றச்சாட்டை மறுத்துள்ளது. உக்ரைன் நாட்டிற்கான மேற்கத்திய நாடுகளின் ஆதரவின் எதிர்காலத்தில் நிச்சயமற்ற தன்மை இருக்கும் நேரத்தில், ரஷ்யாவுடன் போர்நிறுத்தம் பற்றி பேசக்கூடாது என்பதை உணர்த்துவதாக இந்த தாக்குதல் காட்டுகிறது என்று உக்ரேன் நாட்டின் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு

கவுன்சிலில் இருக்கும் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் உட்பட பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவின் இந்த திடீர் தாக்குதல்களுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் ஐ.நா தூதர் Vasily Nebenzya கூறுகையில், ரஷ்யா, உக்ரைன் நாட்டின் இராணுவ உள்கட்டமைப்பை மட்டுமே தாக்கியதாகவும், உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகளில் நடந்த பொதுமக்களின் உயிரிழப்புகளுக்கு உக்ரைன் தான் பொறுப்பாகும் என்றும் கூறினார். இதேவேளையில் உக்ரைன் நாட்டின் வெளியுறவு அமைச்சகம், உக்ரைன் நாட்டிற்கான மேற்கத்திய நாடுகளின் ஆதரவின் எதிர்காலத்தில் நிச்சயமற்ற தன்மை உள்ளதை

வேளையில் ரஷ்யா தனது தாக்குதலை தொடர்ந்து அதிகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *