திடீர் வேலைநிறுத்தம் : ஜேர்மனியில் 1000 விமான சேவைகள் பாதிப்பு

ஜேர்மனியில் உள்ள லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இதனால் 1000 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் 1 இலட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சுமார் 27 மணி நேரம் இந்த போராட்டம் நீடிக்கும் என விமான தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

பெரிய விமான நிறுவனம்
ஜெர்மனியின் மிகப்பெரிய விமான நிறுவனமான லுப்தான்சா ஐரோப்பாவில் 2-வது பெரிய விமான நிறுவனமாக திகழ்கிறது.

இதனால் அமெரிக்கா, கனடா, ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல வேண்டிய லுப்தாப்சா விமான பயணிகளும் நெருக்கடிக்கு உள்ளாகினர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *