Sugar Intake Level Check : நீங்கள் அதிக சர்க்கரை எடுத்துக்கொள்கிறீர்களா? இதோ பரிசோதிக்கும் வழிகள்!

உங்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் நீங்கள் உண்ணும் உணவுதான் காரணமாகிறது. நீங்கள் சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவற்றை போதிய அளவுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதிகளவு எடுத்துக்கொள்ளக்கூடாது. சர்க்கரை உடலுக்கு ஆற்றலை வழங்கும் முக்கிய உணவுப்பொருள்தான். மனிதர்கள் உயிர்வாது தேவையான ஒன்று. ஆனால் அதுவே அதினமானால் உங்களுக்கு சிரமம்தான். அதிக சர்க்கரையை எடுத்துக்கொள்ளும்போது பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது.
நீங்கள் எடுத்துக்கொள்ளும் சர்க்கரைதான் உங்கள் உடல் உபாதைகளுக்கு காரணம் என்று நினைத்தீர்கள் என்றால், உங்களுக்கு இந்த அறிகுறிகள் தோன்றுகிறதா என்று சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
உடல் எடை அதிகரிப்பது
எதிர்பாராத உடல் எடை அதிகரிப்பது அதிக சர்க்கரை நீங்கள் எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதற்கான அறிகுறிகள். அதிக சர்க்கரை எடுத்துக்கொள்வது, குறிப்பாக பதப்படுத்தப்பட்ட உணவில் இருந்து அதிக சர்க்கரை எடுத்துக்கொள்ளும்போது உங்கள் உடலில் தேவையற்ற கொழுப்பு அதிகம் சேர்ந்து உங்கள் உடல் எடை கூடுகிறது.
சர்க்கரை சாப்பிட வேண்டும் என்ற உணர்வு
அதிக சர்க்கரை எடுத்துக்கொள்வதால் அதிக இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற உணர்வு தூண்டப்படுகிறது. சர்க்கரை அதிகம் நிறைந்த ஸ்னாக்ஸ்களை நீங்கள் சாப்பிட வேண்டும் என்ற ஏற்பட்டால் உங்கள் உடல் சர்க்கரைக்கு அடிமையாகிவிட்டது என்று பொருள்.
சரும வியாதிகள்
அதிகளவில் நீங்கள் சர்க்கரையை எடுத்தீர்கள் என்றால், அது உங்கள் உடலில், முகப்பரு போன்ற சரும பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. இதனால் வயோதிக தோற்றமும் ஏற்படுகிறது. சர்க்கரையை அதிகளவில் எடுத்துக்கொள்வது உங்களுக்கு அழற்சியை ஏற்படுத்துகிறது. அது சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
சோர்வு
சர்க்கரை உங்களுக்கு தற்காலிக சக்தியை வழங்கும் ஒன்றாக இருந்தாலும், பின்னர் அது உடலில் ஆற்றல் இழப்பைதான் ஏற்படுத்துகிறது. நன்றாக உறங்கி விழித்த பின்னரும் நீங்களே குறைவான திறன்களுடன் உணர்ந்தீர்கள் என்றால், அது ரத்தச்சர்க்கரை அளவில் உள்ள ஏற்ற இறக்கத்தை காட்டுகிறது. இது நீங்கள் அதிக சர்க்கரை சாப்பிடுவதை காட்டுகிறது.
அடிக்கடி உடல் உபாதை ஏற்படுவது
அதிக சர்க்கரையை எடுத்துக்கொள்ளும்போது அது உடல் நோய் எதிர்ப்பு திறனை பாதிக்கிறது. இதனால் உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலம் செயழிக்க நேரிடுகிறது. இதனால் நீங்கள் அடிக்கடி உடல் நலன் பாதிக்கப்படுகிறீர்கள் அல்லது நீண்ட கால உடல் உபாதைக்கு ஆளாகிறீர்கள்.
இன்சுலீன் எதிர்ப்பு அதிகரித்தல்
இன்சுலீன் எதிர்ப்பு உங்கள் உடலில் செல்களை இழக்கச்செய்கிறது. இது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. வழக்கமாக அதிகளவில் சர்க்கரையை எடுத்துக்கொள்வது இன்சுலின் எதிர்ப்பை அதிகரித்து, நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது.
ஒவ்வொருவருக்கும் சர்க்கரை என்பது வெவ்வேறு வகையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அது ஒவ்வொருவரின் சர்க்கரை எடுத்துக்கொள்ளும் அளவைப்பொறுத்து மாறுபடும். அனைத்து சர்க்கரை அளவுகளுமே ஆபத்து அல்ல. பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் சர்க்கரைதான் ஆபத்துக்களை வழங்குகிறது. பழங்களில் இருக்கும் சர்க்கரையால் ஆபத்து அல்ல.