கோடை வெளியில் எட்டிபாக்குது.. இந்த நேரத்தில் இது டக்கரான பிஸ்னஸ் ஐடியா..!!

நல்ல லாபம் கிடைக்க கூடிய ஒரு பிஸினஸ் தொடங்கனும், ஆனா என்ன பிஸினஸ் செய்றதுனு தெரியல. இப்படி புலம்பிகிட்டு இருக்கிறவங்க இந்த பிஸினஸ் யோசனையை முயற்சி செஞ்சு பார்க்கலாம்.

சத்தான பொருட்களை உண்ண வேண்டும், குறிப்பாக பழங்களை அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது. இப்படி ஆரோக்கியமான பானம் என்றாலே பெரும்பாலானவர்களின் சாய்ஸ் ஜூஸ். எனவே ஜூஸ் கடை வைத்து ஓரளவு லாபத்துடன் தொழிலை நிர்வகிக்கலாம் என்கின்றனர் அனுபவம் பெற்றவர்கள்.

ஜூஸ் கார்னரை தொடங்குவது எப்படி? பழ ஜூஸ் கடை வைப்பதற்கு முன்பு அதற்கு பொருத்தமான இடத்தை தேர்வு செய்ய வேண்டும். பெரிய நிறுவனங்கள், பூங்காக்கள், ஜிம்களுக்கு அருகே கடைகளை வைக்கலாம்.

கடை வைக்கும் இடத்தை தேர்வு செய்த பின்னர், உள்ளூர் அரசு நிர்வாகத்திடம் அனுமதி வாங்க வேண்டும். குறிப்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அனுமதி கொடுக்க வேண்டும்.உரிய அனுமதி பெற்ற பின்னர், பழம் பிழிவதற்கான சாதனங்கள், குளிர்சாதன பெட்டி உள்ளிட்டவற்றை வாங்க வேண்டும்.

எவ்வளவு முதலீடு?: ஜூஸ் கடைகள் வைப்பது தொடக்கத்தில் பெரும் லாபம் இல்லாதது போல இருந்தாலும் வாடிக்கையாளர்களுக்கு பிடித்து விட்டால் பின்னாளில் நல்ல லாபம் கிடைக்கும். பொதுவாக 5 முதல் 7 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய வேண்டி இருக்கும்.

ஜூஸ்களுக்கான தேவை ஆண்டு முழுவதுமே இருக்கிறது. குறிப்பாக கோடை காலங்களில் அதிகம். எனவே லேட்டாக பிக்கப் ஆனாலும் தொழில் நஷ்டமடையாது.

லாபம் எப்படி இருக்கும்?: கடை வைத்திருக்கும் இடத்தை பொறுத்து தொழில் விருத்தி ஆகும் என்றாலும் பொதுவாக ஒரு கிளாஸ் ஜூஸில் 50% வரை லாபம் கிடைக்கும் என்கின்றனர் இந்த துறையில் அனுபவம் பெற்றவர்கள்.

ஒரு நாளைக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு வியாபாரம் நடந்தால் 5 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும் என கூறுகின்றனர். மாதந்தோறும் ஒன்றரை லட்சம் வரை லாபம் ஈட்ட முடியும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

தரமும், தூய்மையும் முக்கியம்: ஜூஸ் கடைகளை பொறுத்துவரை , தரமான பழங்கள், ஐஸ் கட்டிகள் பயன்படுத்தப்பட வேண்டும். கடையை தூய்மையாக வைத்திருந்தால் தான் வாடிக்கையாளர்களை தக்க வைக்க முடியும். ஜூஸ் மட்டுமின்றி மில்க் ஷேக்குகள், புரோட்டீன் ஷேக்குகள் ஆகியவற்றையும் சேர்த்து விற்பனை செய்தால் லாபம் காண முடியும் என்கின்றனர் வல்லுனர்கள்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *