சூரியன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்…. நல்ல காலம் ஆரம்பம்

Sun Transit: ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் குறிப்பிட்டு காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்சிகள் என அழைக்கப்படுகின்றன. சூரியன் கிரகங்களின் அரசனாக பார்க்கப்படுகிறார். இவர் மாதம் ஒருமுறை தனது ராசியை மாற்றுகிறார். சூரியனின் ராசி மாற்றம் சங்கராந்தி என்று அழைக்கப்படுகின்றது. சூரியன் பெயர்ச்சியால் ராசிகளில் மட்டுமின்றி உலகச் சூழலிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

மார்ச் மாதம் 14ஆம் தேதி சூரியன் மீன ராசியில் பிரவேசிக்க உள்ளார். மீனத்தில் சூரியனின் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இதனால் சிலருக்கு சுப பலன்களும் சிலருக்கு பிரச்சினைகளும் ஏற்படும். எனினும் சூரியன் பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். இவர்கள் தங்கள் வாழ்வில் மகிழ்ச்சியின் உச்சம் தொடுவார்கள். பணியிடத்திலும் வியாபாரத்திலும் அதிக லாபம் காண்பார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் (Zodiac Signs) இந்த பதிவில் காணலாம்.

ரிஷபம் (Taurus)

ரிஷப ராசிக்காரர்களுக்கு சூரியன் பெயர்ச்சி அதிக்கப்படியான லாபத்தை கொண்டு வரும். சூரியன் பெயர்ச்சி காலத்தில் உங்களது வசதிகள் அதிகரிக்கும். பண வரவு அதிகமாகும். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகள் கிடைக்கும். இப்பொழுது முதலீடு செய்வதற்கான நேரம். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ரிஷப ராசிக்காரர்களுக்கு இப்போது அபரிமிதமான லாபம் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு மரியாதையும் அதிகரிக்கும். உங்கள் தலைமைத்துவ பண்புகள் பிரகாசிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டு வரும். சூரியன் அருள் காரணமாக நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் இப்போது வெற்றிகரமாக முடிவடையும்.

மிதுனம் (Gemini)

சூரியன் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். உங்களுக்கு பணியிடத்தில் வெற்றி பெற பல வாய்ப்புகள் கிடைக்கும். மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் பரிபூரண ஒத்துழைப்பு இருக்கும். நீண்ட நாட்களாக உங்களை வாட்டி வதைத்த நிதி சிக்கல்கள் இப்பொழுது தீரும். பணவரவு அதிகமாவதாக் பொருளாதார நிலை ஏற்படும். சூரியனின் தாக்கத்தால் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த காலத்தில் பல புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். பண வரவு அதிகமாகும். நிதிநிலை நன்றாக இருக்கும். வணிகம் செய்பவர்கள் நல்ல லாபத்தை ஈட்டலாம்.

கன்னி (Virgo)

சூரியனின் பெயர்ச்சியின் தாக்கம் கன்னி ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நல்ல செய்திகளை கொண்டு வரும். இந்த காலத்தில் நீங்கள் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இந்த பயணங்களால் அனுகுலமான நன்மைகள் உருவாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பரிபூரண ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் உங்கள் உறவு மேம்படும். நீண்ட நாட்களாக உங்களை வாட்டி வதைத்து வந்த பிரச்சனைகள் தீரும். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை காண முடியும். பதவி உயர்வும் கிடைக்கும். பணியிடத்தில் பல ஏற்றங்கள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் கன்னி ராசிக்காரர்களுக்கு இப்போது அபரிமிதமான லாபம் கிடைக்கும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *