முடிவுக்கு வரும் சன் டிவியின் முக்கிய சீரியல்… ஒரு வருஷம் கூட ஆகலையே!
சன்டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட மிஸ்டர் மனைவி சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த தகவல் ஷபானாவின் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜீ தமிழின் செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமானவர் ஷபானா ஷாஜகான். அந்த சீரியல் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, ஷபானா அடுத்து எந்த சீரியலில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், சன் டிவி சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அதன்படி கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்ட சன் டிவியின் மிஸ்டர் மனைவி சீரயில் மூலம் ஷபானா சின்னத்திரையில் ரீ-என்ரி கொடுத்தார். பவன் ரவீந்திரன் மற்றும் சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் இந்த சீரியலில், அனுராதா, லதா, ஏ. வெங்கடேஷ், லோகேஷ் பாஸ்கரன், மான்சி ஜோஷி, ஸ்மிருதி காஷ்யப், ஜீவா ரவி, சபிதா ஆனந்த், தரணி, ஸ்ரீ பிரியா, சஞ்சய் குமார் அஸ்ரானி, உள்ளிட்ட பலர் துணை நடிகர்களாக நடித்துள்ளனர்.
புதுமணத் தம்பதிகளான அஞ்சலி மற்றும் விக்கி இருவரும் தங்களது அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் சவால்களை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சமூக சமத்துவத்திற்காக பேசும் வலிமையான மற்றும் சுதந்திரமான பெண்ணாக சித்தரிக்கப்பட்ட அஞ்சலி, தனது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். மறுபுறம், விக்கி, தனது மனைவியின் கேரக்டலை மாற்ற முயற்சிக்கிறார். இதனால் ஏற்படும் பிரச்சனைகளே இந்த சீரியலின் கதை.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியல் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், சீரியலின், க்ளைமாக்ஸை நெருங்கும் போது, ரசிகர்கள் ஒரு மறக்கமுடியாத இறுதிக்கட்டத்தை கொடுக்க சீரியல் குழுவினர் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்த சீரியலின் க்ளைமேக்ஸ் காட்சி, நிச்சயமாக மனதைக் கவரும் முடிவாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.