Yamaha FZ பைக் பிரியர்களுக்கு வெளியான சூப்பர் நியூஸ்..!

யமஹா நிறுவனத்தின் FZ மாடல் பைக்குகளுக்கு இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்கள் உண்டு என்பது நமக்குத் தெரியும். அந்த வகையில் இதன் கிளாசிக் மாடலான FZ-X சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது அதன் புதிய குரோம் மற்றும் பிளாக் எடிஷன் மாடலை நிறுவனம் சமீபத்தில் நடந்த பாரத் மொபிலிட்டி ஷோ 2024 நிகழ்வில் காட்சிப்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த பைக் மாடல்கள் விற்பனை நிலையங்களில் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில் குரோம் மாடல் FZ-X பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.40 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முறையே பிளாக் எடிஷன் மாடலின் விலை ரூ.1.36 எனும் எக்ஸ்-ஷோரூம் விலைக்கு பட்டியலிட்டப்பட்டுள்ளது. ஜப்பானிய நிறுவனமான யமஹா சில சலுகைகளையும் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. அதாவது, முதல் 100 இணைய முன்பதிவுகளை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு பிரபல கேஷியோ நிறுவனத்தின் ஜி-ஷாக் வாட்ச் பரிசாக வழங்கப்படுகிறது. பைக்கை டெலிவரி எடுக்கும்போது வாடிக்கையாளர் இந்த பரிசைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது புதிய FZ-X பைக்கின் அம்சங்கள் என்ன என்பதைப் பார்க்கலாம்.

புதிய FZ-X பைக்கில் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் (TCS), முன்பக்கத்தில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ், பின்பக்க டிஸ்க் பிரேக், பல செயல்பாடுகளுடன் வரும் முழு அளவு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வட்ட வடிவிலான முன்பக்க முகப்பு விளக்கு, சேற்றில் இருந்து பாதுகாக்கும் பின்பக்க மட் கார்டு, எஞ்சினுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்புக் கவசம், புளூடூத் கனெக்ட் வசதியுடன் வரும் Y-Connect செயலி போன்ற பல அம்சங்கள் உள்ளன. இந்த பைக்கில் 149சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

இதில் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இது 12.4 எச்பி சக்தியையும், 13.3 என்.எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. பயணத்தை சுகமாக்கும் சஸ்பென்ஷனைக் குறித்து பார்க்கையில், முன்பக்கம் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதே பின்பக்கம் 7 படிகள் வரை மாற்றியமைக்கக்கூடிய மோனோகிராஸ் சஷ்பென்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் 282 மிமீ அளவுள்ள டிஸ்க் பிராக் ஏபிஎஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஆனால் பின்பக்கம் ஏபிஎஸ் இல்லாமல் 220 மிமீ அளவுள்ள டிஸ்க் பிரேக் உள்ளது. சந்தையில் தற்போது கிளாசிக் வாகனங்களின் மீது அதிக ஈர்ப்பு உள்ளதால், பைக் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த மாடல் பைக்குகளை தயாரிக்கும் முனைப்பில் இருக்கின்றன. ஆனால், யமஹா குறைந்த திறன் கொண்ட கிளாசிக் மாடல் பைக்குகளை சந்தைக்கு அறிமுகம் செய்து வருகிறது. நிறுவனத்தின் அதிக திறன்கொண்ட கிளாசிக் பைக்குகளை எதிர்பார்த்து வாடிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர் என்பதே கள நிலவரமாக உள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *