புத்தாண்டுக்கு சூப்பர் ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்த ஜியோ…விவரங்கள் இதோ
புத்தாண்டை கொண்டாடும் விதமாக ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் கஸ்டமர்களுக்காக புத்தாண்டு சலுகையை அறிவித்து உள்ளது. இந்த சலுகை ப்ரீபெய்டு திட்டங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் செய்யப்பட்ட பிளான்கள் ஜியோ வெப்சைட்டில் பட்டியலிடப்பட்டுள்ளன. ஜியோ கஸ்டமர்கள் அதனை தேர்ந்தெடுத்து ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
இந்த பிளானுக்கு “நியூ இயர் ஆஃபர்” என்ற டேக் வழங்கப்பட்டுள்ளது. பிற பிளான்களோடு ஒப்பிடும்போது ஒரே விலையில் இருந்தாலும், இந்த பிளான்களில் கூடுதல் பலன் வழங்கப்படுகிறது. இந்த நியூ இயர் பிளானுக்கான விலை 2,999 ரூபாய் ஆகும். இது ஒரு புதிய பிளான் கிடையாது. கூடுதல் வேலிடிட்டி வழங்கக்கூடிய சலுகையின் ஒரு பகுதியாக இது அமைகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 2,999 ரூபாய்க்கான பிளான்:
இந்த பிளான் லோக்கல் மற்றும் STD ஆகிய இரண்டிற்கும் அன்லிமிடெட் காலிங் வசதி, ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் தினமும் 2.5GB 4G டேட்டா ஆகிய பெனிஃபிட்களுடன் வருகிறது.
அதுமட்டுமல்லாமல் JioCinema, JioTV மற்றும் JioCloud services ஆகியவற்றிற்கு 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த பிளான் ஜியோ வெல்கம் ஆஃபரின் ஒரு பகுதியாக அமைகிறது. அதாவது இந்த வேலிடிட்டி காலம் முடிவடையும் வரை யூசர்களுக்கு அன்லிமிடெட் 5G டேட்டா வழங்கப்படும்.
புத்தாண்டு 2024 சலுகையின் ஒரு பகுதியாக, இந்த பிளானோடு ஜியோ நிறுவனம் 24 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி வழங்குகிறது. அதாவது இந்த பிளான் மூலமாக மொத்தம் 389 நாட்கள் வேலிடிட்டி கஸ்டமர்களுக்கு கிடைக்கும்.
பிற ஆண்டு வாரியான ப்ரீப்பெய்டு பிளான்கள் :
365 நாட்கள் வேலிடிட்டி வழங்கக்கூடிய ஜியோ ப்ரீபெய்டு பிளானில் இந்தத் திட்டம் மட்டும் அடங்காது. பல்வேறு விதமான நீண்ட கால பிளான்களை ஜியோ நிறுவனம் வழங்குகிறது. அவற்றில் 2,575 ரூபாய்க்கான திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், ஒரு நாளைக்கு 2GB டேட்டா, தினமும் 100 SMS மற்றும் இரண்டு ஜியோ சர்வீஸ்களுக்கான அணுகல் வழங்கப்படும்.