பிரபல அரசியல் பிரமுகரின் பெயரை அறிவிக்கப்பட்டதுமே போனில் தொடர்பு கொண்டு வாழ்த்திய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுகவுக்கு அடுத்தப்படியாக பாஜகதான் பிரமாண்ட கூட்டணி அமைத்துள்ளது.

தமிழகத்தில் 19 தொகுதிகளில் நேரடியாக வேட்பாளர்களை களம் இறக்கும் பாஜக மற்ற 20 தொகுதிகளை கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கியுள்ளது. அதன்படி அதிகப்பட்சமாக பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 10 தொகுதிகளுக்கும் பாமக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதேபோல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள், அமமுக கட்சிக்கு 2 இடங்கள், ஓபிஎஸ்சின் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுவுக்கு ஒரு தொகுதியும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஜான் பாண்டியனின் தமமுக, தேவநாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி, ஏசி சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி ஆகிய கட்சிகளுக்கும் தலா ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்சிகள் தாமரை சின்னத்தில் களம் காண உள்ளன. பாஜக கூட்டணியில் வேலூர் தொகுதி வேட்பாளராக புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.

ஏசி சண்முகத்தின் பெயர் அறிவிக்கப்பட்டதுமே அவரை உடனடியாக போனில் தொடர்பு கொண்ட நடிகர் ரஜினிகாந்த் தேர்தலில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதிய நீதிக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் ஏ.சி.சண்முகம் அவர்கள் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தாமரைச் சின்னத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக டெல்லி தலைமையில் அறிவித்தபின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், முன்னாள் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன், அரவிந்த் ரெட்டி, தமிழ் நாடு பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் மற்றும் தமிழ் திரைப்பட நடிகர் சூப்பர் ஸ்டார் பத்மஸ்ரீ ரஜினிகாந்த் அவர்களும் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *