சம்பளத்தில் சசிகுமாரை பின்னுக்கு தள்ளிய சூரி… கருடன் படத்தின் சூப்பர் அப்டேட்….
படத்திற்கான சம்பளத்தில் பிரபல நடிகர் சசிகுமாரை, நடிகர் சூரி பின்னுக்கு தள்ளியுள்ளார். இது தொடர்பான தகவல்கள் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காமெடி நடிகராக பல படங்களில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் சூரி. இவர் இடம் பெற்றிருந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், தேசிங்கு ராஜா, ஜீவா, வேதாளம், ஜில்லா உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் காமெடி கேரக்டரில் நடிப்பதை தற்போது சூரி நிறுத்தியுள்ளார்.
அவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த விடுதலை திரைப்படம் மெகா ஹிட் ஆனது. இந்த படத்தை பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியிருந்தார். விடுதலை படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் அடுத்த பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதைத்தொடர்ந்து வெற்றிமாறன் கதை எழுதியுள்ள, துரை செந்தில்குமார் இயக்கி வரும் கருடன் என்ற படத்தில், முன்னணி கேரக்டரில் சூரி நடிக்கிறார்.
இந்த படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, மைம் கோபி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோ காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
அதைத் தொடர்ந்து வெளியான முதல் பாடலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை மார்ச் மாதம் ரிலீஸ் செய்வதற்கு பட குழுவினர் முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்திற்காக சூரி வாங்கியுள்ள சம்பளம் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கருடன் படத்திற்காக சசிகுமாருக்கு ரூ. 2 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சூரிக்கு ரூ. 8 கோடி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. அந்த அளவுக்கு படத்தில் இவர் நடித்துள்ள கேரக்டர் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று பட குழுவினர் கூறியுள்ளனர்.