Suriya – சூர்யா கதை கேட்கும் முறை இதுதானா?.. இது என்ன புது ஃபார்முலாவா இருக்கு
சூர்யா இப்போது கங்குவா படத்தில் நடித்திருக்கிறார். சிறுத்தை சிவா படத்தை இயக்கியிருக்கிறார்.
தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிரார்.
அடுத்ததாக அவர் சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்கராவுடன் ஒரு படம், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் வாடிவாசல் உள்ளிட்ட படங்களில் நடிக்கவிருக்கிறார். இந்தச் சூழலில் சூர்யா கதை கேட்கும் முறை குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமானவர் சூர்யா. வசந்த் இயக்கிய அந்தப் படத்தில் விஜய்யுடன் தோன்றிய சூர்யாவை பலரும் விமர்சிக்கவே செய்தனர்.
நடனம் வரவில்லை, வசனம் பேச தெரியவில்லை என பலர் நேரடியாகவே கூறினர். இருப்பினும் அதனை எல்லாம் கண்டுகொள்ளாத சூர்யா தொடர்ந்து தனது திறமையை வளர்த்துக்கொள்வதில் மட்டுமே கவனத்தை செலுத்தினார்.
மாற்றம் தந்த நந்தா: நேருக்கு நேர் படத்துக்கு பிறகு தொடர்ந்து நடித்துவந்த சூர்யாவுக்கு நந்தா படம் மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்தது. பாலா இயக்கியிருந்த அந்தப் படத்தில் சூர்யாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதேபோல் கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்த காக்க காக்க படமும் மெகா ஹிட்டானது. அந்த இரண்டு படங்களும்தான் சூர்யாவுக்கு ஆக்ஷன் ஹீரோ என்ற இமேஜை பெற்றுக்கொடுத்தன.