Suriya 43 Update: சூர்யா – சுதா கொங்கரா படம் கைவிடப்பட்டதா? லேட்டஸ்ட் அப்டேட்!
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் இரண்டாவது முறையாக சூர்யா நடிக்கும் படம் புறநானூறு. இவர்களது கூட்டணியில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான சூரரைப்போற்று படம் மிகப்பெரிய ஹிட் அடித்து இருந்தது.
இந்நிலையில், இந்த வெற்றி கூட்டணி மீண்டும் புறநானூறு படத்தில் இணைந்துள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. இந்த படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் பற்றிய அப்டேட் வெளியாகி நீண்ட நாட்கள் ஆனா நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த அப்டேட் எதுவும் வெளியாக வில்லை. இதனால் படம் ட்ராப் செய்யப்பட்டதா என்றும் தகவல் வெளியானது.
தற்போது கங்குவா படத்தின் வேலைகள் முடிந்துள்ள நிலையில், அடுத்ததாக சூர்யா புறநானூறு படத்தில் இணைய உள்ளார் என்று கூறப்பட்டது. இந்த சமயத்தில் படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
அதில், “புறநானூறு படத்துக்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது என்றும், இந்தப் படத்தில் நாங்கள் இணைந்து பணியாற்றுவது சிறப்பு வாய்ந்தது என்று” சூர்யா மற்றும் சுதா கொங்கரா இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.