Suriyan Luck: சூரியன் புகுந்து விட்டார்..பணமழை இந்த ராசிகளுக்கு மட்டுமே!
நவகிரகங்களின் தலைவனாக விளங்கி வருபவர். சூரிய பகவான். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார். இவருடைய மாற்றத்தின் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றன. சூரிய பகவான் 12 ராசிகளில் சிம்ம ராசியின் அதிபதியாக விளங்கி வருகிறார்.
சூரிய பகவான் விருச்சிக ராசியில் பயணம் செய்து வந்தார் கடந்த டிசம்பர் 16ஆம் தேதி அன்று குரு பகவானின் சொந்த ராசியான தனுசு ராசிக்குள் நுழைந்தார். குரு பகவானும், சூரிய பகவானும் நட்பு கிரகம் என்கின்ற காரணத்தினால் இவருடைய இடமாற்றம் சிறப்பாக அமைந்துள்ளது.
சூரிய பகவானின் இடமாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். குறிப்பிட்ட சிலர் ஆசைகள் சூரிய பகவானின் அருளை பெறுகின்றனர். இதன் விளைவாக அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறப்போகின்ற சில ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
மிதுன ராசி
சூரிய பகவான் உங்கள் ராசியில் ஏழாம் வீட்டில் சஞ்சாரம் செய்கின்றார். இந்த ராசிக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் இனிமை அதிகரிக்கும். தொழில் ரீதியாக முன்னேற்ற வாய்ப்புகள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். கூட்டு வேலை முயற்சிகள் வெற்றியாக அமையும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
கன்னி ராசி
உங்கள் ராசியில் சூரிய பகவான் நான்காம் வீட்டில் சஞ்சாரம் செய்து வருகின்றார். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. அரசு வேலை செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். நிலுவையில் உள்ள தொகைகள் உங்களைத் தேடி வரும். வணிகர்கள் நல்ல லாபம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பெற்றோருடன் உறவு வலுபெறும். சமூகத்தில் மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.
தனுசு ராசி
சூரியன் உங்கள் ராசியில் முதல் வீட்டில் சஞ்சாரம் செய்து வருகின்றார். உங்களுக்கு தன்னம்பிக்கை இருமடங்காக அதிகரிக்கும். நினைத்த திட்டங்கள் அனைத்தும் வெற்றியாக முடிவடையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடிய வரும். சூரியனின் இடமாற்றம் நல்ல வெற்றியை உங்களுக்கு பெற்று தரும். வாழ்க்கை முறை இனிமையாக அமையும். குடும்ப உறுப்பினர்களோடு உறவு வலுபெறும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.