பருத்திவீரன் பஞ்சாயத்து.. நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட சூர்யா – அமீர்?.. என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: கார்த்தியை வைத்து அமீர் இயக்கிய பருத்திவீரன் படம் மெகா ஹிட்டானாலும் அவருக்கும் சூர்யா தரப்புக்கும் அந்தப் படத்திலிருந்துதான் மோதல் எழுந்தது.
இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. சூழல் இப்படி இருக்க சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் பருத்திவீரன் பஞ்சாயத்து தலை தூக்கியது. இதனால் இந்த விவகாரத்தில் அனல் பறந்தது நினைவுகூரத்தக்கது.
சூர்யா நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியானது. சமீப காலமாகவே சமூக அக்கறையுள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறார் அவர். சூரரைப் போற்று, ஜெய் பீம் ஆகிய படங்களுக்கு மெகா ரெஸ்பான்ஸ் கிடைத்தது. ஆனால் எதற்கும் துணிந்தவன் படத்துக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் படத்தின் கதைக்களம் பொள்ளாச்சி அராஜகத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. அந்த மாதிரியான கதையில் தைரியமாக நடித்ததற்காகவே சூர்யாவை ரசிகர்கள் பெரிதும் பாராட்டினர்.
கங்குவா: தற்போது அவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்திருக்கிறார். படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதாகவும் தற்போது இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு இறங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஞானவேல் ராஜா படத்தை தயாரிக்கிறார். 3டி தொழில்நுட்பத்தில் மொத்தம் பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் படம் வெளியாகிறது. சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான கங்குவா க்ளிம்ப்ஸுக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பை கொடுத்தனர்.
அடுத்த படம்: கங்குவா படத்தை முடித்துவிட்டு வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிப்பாரா இல்லை சுதா கொங்கராவின் புறநானூறு படத்தில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. வெற்றிமாறன் விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பில் தற்போது பிஸியாக இருக்கிறார். இன்னும் சில மாதங்களில் அவர் பட வேலைகளை முடித்துவிட்டால் சூர்யா அடுத்ததாக வாடிவாசலுக்கு செல்வார். இல்லையென்றால் புறநானூறு படத்தை முடித்துவிட்டு வாடிவாசலுக்கு செல்வார் என்று கருதப்படுகிறது.
கன்ஃபார்ம்தான்: இதற்கிடையே கார்த்தியை வைத்து அமீர் இயக்கிய பருத்திவீரன் படம் தொடர்பான பஞ்சாயத்து மீண்டும் சில மாதங்களுக்கு முன்பு தலைதூக்கியது.