இடியை இறக்கிய சூர்யகுமார் யாதவ்.. மிரண்டு போன பிசிசிஐ.. அடியோடு மாறிய இந்திய அணி
இந்திய டி20 அணியில் ரோஹித் சர்மா மட்டுமே சேர்க்கப்படுவார் என் முதலில் நினைத்த நிலையில் விராட் கோலியும் சேர்க்கப்பட்டு இருக்கிறார். அதற்கு கோலியின் விருப்பம் மட்டுமே காரணம் இல்லை என்றும், அதன் பின்னணியில் சூர்யகுமார் யாதவ் இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.
சூர்யகுமார் யாதவுக்கு தென்னாப்பிரிக்க டி20 தொடரின் போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால் அவர் கிரிக்கெட்டில் இருந்து விலகி பிசிசிஐ-யின் தேசிய கிரிக்கெட் அமைப்பில் இருக்கும் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவருக்கு சிகிச்சையும், காயத்தில் இருந்து மீண்டு மீண்டும் போட்டிகளில் பங்கேற்க தேவையான உடற்தகுதி பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வந்தன.
இதன் இடையே அவருக்கு விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் குடலிறக்கம் எனும் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. இது குறித்து சமீபத்தில் தகவல்கள் வெளியானது. அவர் ஐபிஎல் தொடரின் பாதியில் தயாராகி போட்டிகளில் பங்கேற்பார் என கூறப்பட்டது. ஆனால், அது அத்தனை எளிதான விஷயமல்ல. எனவே, தான் பிசிசிஐ அவசரகதியில் விராட் கோலியை மீண்டும் டி20 அணியில் சேர்த்து இருப்பதாக கூறப்படுகிறது.
விளையாட்டு வீரர்களுக்கு குடலிறக்கம் ஏற்பட்டால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதன் பின் முழுமையாக மீண்டு போட்டிகளில் ஆடும் அளவுக்கு உடற்தகுதி பெற இரண்டு மாதங்கள் ஆகும். இந்த தகவல் மூலம் பிசிசிஐ-யின் டி20 உலகக்கோப்பை திட்டத்தில் இடியை இறக்கி இருக்கிறார் சூர்யகுமார் யாதவ்.