படுக்கையில் “அது” கிட்டயே உட்கார்ந்த சுசனா சேத்.. குழந்தை ஜாடை “அவர்” மாதிரியே.. இவரெல்லாம் ஒரு தாயா?

தன்னுடைய குழந்தை, கணவரின் ஜாடையில் இருந்துள்ளதும், சுசனா சேத்துக்கு பிடிக்கவில்லை.. அந்த பிஞ்சுவை ஈவிரக்கமின்றி கொன்றதற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது.

கடந்த 3 நாட்களாகவே, இந்த பெங்களூர் சம்பவம் பொதுமக்களை நிலைகுலைய வைத்து வருகிறது. கொலை செய்வதற்காகவே ஹோட்டலில் ரூம் போட்டு, 4 வயது குழந்தையை கொடூரமாக கொன்றுள்ளார் இந்த மெத்த படித்த பெண்.

ஆச்சரியம்: ஹோட்டல் ரூமிலேயே, 4 வயது மகனை கொன்று, அந்த சடலத்தை சூட்கேஸில் அடைத்து வைத்து, ஓட்டலையும் காலி செய்துவிட்டு டாக்ஸியில் பெங்களூருக்கு புறப்பட்டுள்ளார் சுசனா சேத்.. ஆனால், போலீசாரின் துரித நடவடிக்கையாலும், சமயோஜித புத்தியாலும், தப்பிச்சென்ற சில மணி நேரத்திலேயே இந்த பெண் அதிகாரி சிக்கிவிட்டார்.

தாலி கட்டிய கணவர் மீது ஒரு பெண்ணுக்கு இவ்வளவு வெறுப்பு இருக்க முடியுமா? அதுவும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நபர் மீது இவ்வளவு வெறுப்பை உமிழ முடியுமா? என்பது ஆச்சரியமாக உள்ளது.. தம்பதிக்குள் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.. இருவருமே ஒரே கம்பெனியில் வேலை பார்த்தும் வந்திருக்கிறார்கள். ஒருகட்டத்தில் மனைவியை விவாகரத்து செய்ய துணிந்தார் வெங்கட்ராமன். வெங்கட்ராமனுக்கு சாதகமாக தீர்ப்பு வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

போஸ்ட் மார்ட்டம்: குழந்தையின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில், கழுத்து நெரிக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது. ஆனால் கைகளை வைக்காமல் டவல் அல்லது தலைகாணியை வைத்து நெரித்திருக்கலாம் என்கிறார்கள்..

இவர்களது வழக்கு விசாரணையில் உள்ளதால், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெங்கட்ராமன், தன்னுடைய மகனிடம் பேச அனுமதி தரப்பட்டிருக்கிறது. அதன்படி, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வெங்கட்ராமன் தன்னுடைய மகனிடம் செல்போனில் வீடியோ கால் பேசுவாராம்..

அப்படித்தான், கடந்த 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, வெங்கட்ராமன் தன்னுடைய மகனிடம் பேச, சுசானா சேத்தின் செல்போனுக்கு வீடியோ காலில் அழைத்துள்ளார். ஆனால், சுசானா சேத், மகனிடம் போனை கொடுக்காமல் மறுத்துள்ளார்.

ஆத்திரம்: இருந்தாலும், வெங்கட்ராமன் அடிக்கடி போன் செய்து கொண்டேயிருந்தார்.. மற்றொருபக்கம், அப்பாவிடம் பேச வேண்டும் என்றும் குழந்தை அழுதுகொண்டேயிருந்திருக்கிறான். இதுதான் சுசனா சேத்துக்கு ஆத்திரத்தை அதிகரிக்க செய்துள்ளது.. கோபத்தை கொப்பளிக்க செய்துள்ளது.. புத்தி தடுமாற ஆரம்பித்துள்ளது. கணவரை பழிவாங்குவதற்காக, பெற்ற மகனின் கழுத்தை இறுக்கிவிட்டார்.

அளவுக்கு அதிகமாக இருமல் மருந்து கொடுத்துள்ளார்.. அவன் மயங்கி விழுந்ததுமே கழுத்தை நெரித்துள்ளார்.. ஆனால், கைகளால் நெரிக்காமல், தலைகாணியால் அழுத்தியுள்ளார். குழந்தைக்கு மூச்சு திணறியுள்ளது.. மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியுள்ளது.. அப்போதும் ஒரேயடியாக இறுக்கிவிட்டார்.

விவாகரத்து: டைவர்ஸ் ஆகிவிட்டால், தன்னுடைய மகன் கணவருக்கு கிடைக்கக்கூடாது என்பதற்காகவே, குழந்தையை கொன்றதாக வாக்குமூலம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. ஹோட்டல் ரூமில், சுவற்றில் ரத்தக்கறை இருந்துள்ளது.. இதுகுறித்து போலீசார் சுசனா சேத்திடம் கேட்டுள்ளார்கள்.. அதற்கு அவர், தற்கொலைக்காக தன்னுடைய கையை கிழிக்கும்போது, ரத்தம் சுவற்றில் தெறித்துவிட்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் சொல்லும்போது, “இது ஒரு திட்டமிட்ட படுகொலை. சுசனா சேத் தங்கியிருந்த ரூமில் 2 இருமல் மருந்து பாட்டில்கள் இருந்தன. ஒன்று பெரியது, இன்னொன்று சின்னது.. 2 பாட்டில் மருந்தையுமே மகனுக்கு கொடுத்திருக்கிறார். அதற்கு பிறகே கழுத்தை நெரித்துள்ளார்..

படுக்கை சடலம்: குழந்தை இறந்ததுமே, படுக்கையில் சடலம் பக்கத்திலேயே உட்கார்ந்திருக்கிறார்.. வழக்கமாக ஓட்டலில் ரூம் சர்வீஸ், அறையை சுத்தம் செய்ய வருவார்கள்.. ஆனால், ஊழியர்களை ரூமை சுத்தம் செய்யவே அனுமதிக்கவில்லையாம்.. ஓட்டலி காலி செய்த பிறகு ரூமை சுத்தம் செய்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டாராம்..

அதேபோல ஓட்டலை காலி செய்துவிட்டு, டாக்ஸியில் செல்லும்போதுகூட, முன்சீட்டில் உட்கார்ந்துள்ளார்.. AC-யை அதிகமாக வைக்க சொல்லி டிரைவரிடம் கேட்டாராம்.. குழந்தையின் சடலத்திலிருந்து வாடை வரக்கூடாது என்று காரில் சென்ட் அடித்து கொண்டே வந்தாராம்..

இதில் கொடுமை என்னவென்றால், உயிரிழந்த மகன், கணவர் வெங்கட்ராமன் போலவே இருப்பானாம்.. கணவர் ஜாடையில் குழந்தை இருப்பதாக சொந்தக்காரர்கள் அடிக்கடி சொல்வார்களாம். இதெல்லாம் சுசனா சேத்துக்கு எரிச்சலை தந்து வந்திருக்கிறது.

கதறல்: மகன் இறந்த தகவலை போலீசார் வெங்கட்ராமனுக்கு சொல்லி, இந்தோனேசியாவிலிருந்து வரவழைத்தனர்.. நேற்று முன்தினம் இரவு சித்ரதுர்காவுக்கு வெங்கட்ராமன் வந்து சேர்ந்தார்.. அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற அவரிடம் குழந்தையின் உடல் ஒப்படைக்கப்பட்டது… சடலத்தை பார்த்ததுமே கதறி கதறி அழுத வெங்கட்ராமனை பார்த்து நிலைகுலைந்து போனது கர்நாடகா..!

ஆனால், கருணையின் நிழலாக, இரக்கத்தின் இன்னொரு அவதாரமாக, மன்னிப்பின் மறு உருவமாக, காலம் காலமாக பெண்கள் பார்க்கப்பட்டு வந்த நடைமுறைகள் எல்லாம், இதுபோன்ற கல்நெஞ்சுக்காரிகளால் சுக்குநூறாக நொறுங்கி கொண்டிருக்கிறது..!!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *