Sweet Potato Pancake: குழந்தைகள் விரும்பி உண்ணும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு பான்கேக்
இந்த காலகட்டத்தில் குழந்தைகளுக்கு பெரும்பாலும் துரித உணவுகள் போன்றவற்றின் மீது ஈர்ப்பு அதிகரித்துவிட்டன.
அந்தவகையில், குழந்தைகளுக்கு இந்த ஆரோக்கியம் நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு பான்கேக் செய்து கொடுத்து பாருங்கள் விரும்பி உண்பார்கள்.
குழந்தைகள் விருப்பி உண்ணும் சத்தான சர்க்கரை வள்ளிக்கிழங்கு பான்கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சர்க்கரை வள்ளிகிழங்கு – 2
கோதுமை மாவு – 1 கப்
தேங்காய் மாவு – ½ கப்
நாட்டு சர்க்கரை – தேவையான அளவு
பாதாம், வால்நட், முந்திரி- ¼ கப்
உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை நீராவியில் வேகவைத்து பின் தோலுரித்து நன்கு மசித்து எடுத்துக்கொள்ளவும்.
இதனுடன் கோதுமை மாவு, தேங்காய் மாவு மற்றும் நாட்டு சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும்.
சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்த பின்னதாக தட்டை போன்று தட்டி வைத்துக் கொள்ளவும்.
இதையடுத்து தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் தட்டிய மாவை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை சுட்டு எடுக்கவும்.
இதையடுத்து ஒரு கிண்ணத்தில் சோயா சாஸ் மற்றும் தேன் இரண்டையும் மிக்ஸ் செய்து பான் கேக்கின் மீது தடவ வேண்டும்.
இறுதியில் பாதாம், வால்நட், முந்திரியை பொறித்து பான்கேக் மேலே தூவினால் சுவையான சர்க்கரை வள்ளிகிழங்கு பான்கேக் ரெடி.