Swiggy Order : 2023ம் ஆண்டில் ஸ்விகியில் இந்திய மக்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவு எது தெரியுமா?

2023ம் ஆண்டை நிறைவு செய்து 2024ம் ஆண்டு என்ற புத்தம் புதிய ஆண்டுக்குள் நுழைகிறோம். முன்னரெல்லாம் நாம் எப்போதாவது ஓட்டலுக்குச் சென்று உணவு சாப்பிட்டு மகிழ்வோம். ஒரு காலத்தில் அது எப்போதாவது கிடைக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. வெளியில் செல்வது, ஓட்டலுக்கு செல்வது என்பது குஷியான ஒன்றாக இருக்கும்.

வீட்டில் சாப்பிடும் வழக்கமான உணவுகளை தவிர்த்து, ஓட்டலுக்கு செல்லும்போது, ரோஸ்ட், பரோட்டா, சில்லி பரோட்டா, பிரியாணி என வகைவகையான உணவுகளை சாப்பிட்டு மகிழ்வோம். சில நேரங்களில் வீட்டுக்கு வாங்கி வந்தும் உணவு உண்போம். தொழில்நுட்பம் வளரவளர இப்போது நமக்கு என்ன உணவு வேண்டுமோ அதை நாம் பல ஆப்களில் ஆர்டர் செய்து சாப்பிடலாம். அந்த சேவையை ஸ்விகி, சோமேட்டோ உள்ளிட் பல்வேறு ஆப்களே வழங்குகின்றன.

2023ம் ஆண்டில் இந்திய மக்கள் அதிகம் விரும்பி ஆர்டர் செய்த உணவுகள் எது என்பதை அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி ஸ்விகியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவில் பிரியாணி முதலிடத்தில் உள்ளது.

7.8 கோடி பேர் பிரியாணியை ஆர்டர் செய்துள்ளார்கள். அதற்கு அடுத்தபடியாக 4.2 கோடி பேர் பீட்சா ஆர்டர் செய்துள்ளனர். மூன்றாவதா பர்கர் 4.1 கோடி பேர் ஆர்டர் செய்துள்ளதாக ஸ்விகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேபோல் ஸ்விகியில் 2023ம் ஆண்டில் இந்தியாவின் எந்தெந்த நகரங்கள் ஆர்டர் அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது என்ற தகவலையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி 8.7 கோடி பேருடன் பெங்களூரு முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்தாண்டு 8.7 கோடி பெங்களூரில் இருந்து ஸ்விகியில் ஆர்டர் செய்துள்ளனர். அடுத்ததாக டெல்லி 6.4 கோடிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. மூன்றாவதாக 6 கோடி பேர்களுடன் ஹைதராபாத் நகரம் உ

இம்மூன்று நகரங்கள் தொழில் வளர்ச்சியில் முன்னணியில் உள்ள நகரங்கள். அதேபோல் இந்த மூன்று உணவுகளும் ஆரோக்கிய உணவுகளில் இடம்பெறாத உணவுகள். எனவே இதிலிருந்து பெருநகர மக்கள்தான் பெருமளவில் ஸ்விகி, சோமேட்டடோ என உணவுகளை ஆர்டர் செய்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. உணவைப்பொருத்தவரையில் மக்களிடம் ஆரோக்கியமான உணவு குறித்த விழிப்புணர்வு இல்லை என்பதையே காட்டுகிறது.

எனினும் வாழ்வியல் மாற்றங்கள் இன்று நம் வாழ்வில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. எனவே ஆரோக்கியமான வாழ்வுக்கு நல்ல உணவுப்பழக்கங்கள் தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தி வரும் வேளையில் நாம் அதிகளவில் துரித உணவுகளின் பின்னால் ஓடிக்கொண்டிருப்பது கடும் ஆபத்தான ஒன்றுதான்.

எனவே மக்கள் ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *