T20: இனிமே டி20 கிரிக்கெட்டில் ஜப்பான்தான் நம்பர் ஒன்! அப்படி ஒரு தரமான சம்பவம்!

நடப்பாண்டிற்கான கிழக்கு ஆசிய கோப்பைத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 3வது போட்டியில் சீனா – ஜப்பான் அணிகள் மோதின.

மிரட்டிய ஜப்பான்:

டி20 போட்டியான இந்த போட்டியில் ஜப்பான் அணி முதலில் பேட் செய்தது. ஜப்பான் அணிக்காக லச்சன் லேக் – கேப்டன் கென்டல் ப்ளெமிங் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். சீன பந்துவீச்சை இவர்கள் இருவரும் துவைத்தனர் என்றே சொல்ல வேண்டும். களமிறங்கியது முதலே பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசிய இவர்களால் அணியின் ஸ்கோர் மின்னல் வேகத்தில் சதத்தை கடந்தது.

இவர்கள் இருவரும் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் தொடர்ந்து விளாசிக் கொண்டிருந்தனர். அரைசதம் விளாசிய இவர்களது அதிரடியை தடுக்க, சீன கேப்டன் வெய் பந்துவீச்சில் மாற்றம் செய்தார். ஆனால், யார் பந்துவீசிவாலும் அடிப்பேன் என்ற பாணியில் இருவரும் மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.

அதிக ரன்கள் எடுத்த பார்ட்னர்ஷிப்:

அபாரமாக ஆடிய லச்சன் லேக்கும், கேப்டன் ப்ளெமிங்கும் சதம் விளாசினர். 20 ஓவர்கள் முடிவில் ஜப்பான் அணி எந்த விக்கெட்டையும் இழக்காமல் 258 ரன்கள் விளாசியது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடக்க ஜோடி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவே ஆகும். இதற்கு முன்பு, அயர்லாந்து அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தானின் தொடக்க வீரர்கள் ஷாசாய் – உஸ்மான் கானி 2019ம் ஆண்டு 236 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அந்த சாதனையை ஜப்பான் வீரர்கள் முறியடித்துள்ளனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *