தை மாத ராசி பலன் 2024: சனி வீட்டில் உருவாகும் புது கூட்டணி.. பண மழையில் நனையும் ராசிக்காரர்கள்
தை மாதத்தில் சூரியன் மகர ராசியில் பயணம் செய்வதால் மகர மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ் மாதங்களில் தை மாதம் பத்தாவது மாதம்.
மகர ராசிக்குள் சூரியன் நுழைவதால் மகரமாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த தை மாதத்தில் சனியின் வீடான மகர ராசியில் புது கூட்டணி உருவாகிறது. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம் : உங்கள் ராசிக்கு ஐந்தாம் அதிபதியான சூரியன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் படித்து முடித்துவிட்டு வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் பத்தாம் வீட்டில் உச்சம் பெற்று அமரப்போகிறார் வீடு நிலம் போன்றவற்றில் முதலீடுகள் அதிகரிக்கும். புதன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். மாத பிற்பகுதியில் சூரியன், செவ்வாயுடன் பத்தாம் இடத்திற்கு புதன் வருவதால் படித்த படிப்புக்கு தக்கவாறு வேலை கிடைக்கும். ஷேர் மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைக் கொடுக்கும் தை பிறந்தால் வழி பிறக்கும் செய்யும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். சூரியனை வணங்க பலன்கள் பல மடங்காக கிடைக்கும்.
ரிஷபம் : சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக சொத்துக்களில் பங்கு கிடைக்கும், தாய் தந்தையரின் ஆசீர்வாதம் கிடைக்கும். செவ்வாய் உச்சம் பெற்று புதன் சூரியனுடன் இணைவதால் சொத்து வாங்கலாம். வருமானம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வெளிநாட்டு தொழில் தொடர்புகள் சிறப்படையும். மனைவிக்காக செய்யும் செலவுகள் அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்வதால் பெண்களால் நன்மை உண்டாகும் விலை உயர்ந்த பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ளவும். குல தெய்வக் கோயிலுக்கு சென்று வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள்.
மிதுனம்: சூரியன் எட்டாமிடத்தில் செவ்வாய் புதனுடன் பயணம் செய்யப்போவதால் பயணங்களில் நிதானம் அவசியம். வேலை செய்யும் இடத்தில் சிலர் மனதை சங்கடப்படுத்துவார்கள். நெருப்பு விசயங்களில் கவனம் தேவை. கூர்மையான பொருட்களை கையாளும் போது நிதானம் அவசியம். பங்குச்சந்தை முதலீடுகள் தவிர்க்கவும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களிலும் கவனமாக இருக்கவும். உங்களை விட பெரியவர்களிடம் சச்சரவைத் தவிர்க்கவும். பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே வாக்குவாதம் தவிர்க்கவும். மனைவியிடம் சண்டையிட வேண்டாம்.
கடகம் : சூரியன் ஏழாமிடத்தில் உங்கள் ராசிக்கு நேராக சஞ்சரிப்பதால் வியாபாரம் மூலம் பண வரவு அதிகரிக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். செவ்வாய் உச்சம் பெற்று உங்கள் ராசியை பார்க்கிறார். திருமண யோகம் கைகூடி வரப்போகிறது.
வியாபாரம் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். செய்யும் செயல்கள் அனைத்தும் சிறப்படையும். வேலை தொழில் விஷயமாக வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும். மாணவர்களுக்கு உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். தை மாதம் முழுவதும் உறவினர் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள் சுப செலவுகள் அதிகரிக்கும். ஆன்மீகப் பயணம் மன அமைதியைத் கொடுக்கும்.