ஐஸ்வர்யத்தை அள்ளித் தரும் தைவெள்ளி… இப்படி வழிபாடு செய்து பாருங்க!

இன்று ஐஸ்வர்யத்தைத் தரும் தை மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை. ஏன் தை மாதத்தில் வருகிற வெள்ளிக்கிழமைகளை விசேஷமான வெள்ளிக்கிழமை என்கிறோம்?

ஆடி வெள்ளிக் கிழமைகள் தானே விசேஷம்? பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் அம்மன் வழிபாட்டிற்கு உகந்தவையான நாளாக இருக்கும். அதுவும் தை மாதத்தின் வெள்ளிக்கிழமை கூடுதல் விசேஷம். உத்திராண்ய காலத்தின் ஆரம்ப மாதமான தை மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையில் மேற்கொள்ளப்படும் அம்மன் வழிபாடு சிறந்த பலன்களைத் தரும்.

இன்று, அபிராமி அந்தாதி, சௌந்தர்ய லஹரி உள்ளிட்ட அம்மன் குறித்த பாடல்களைப் பாடி வழிபாடு மேற்கொள்ளலாம். தை வெள்ளிக்கிழமைகளில் சுக்ர வழிபாடு செய்யலாம். சுக்கிர பகவானுக்கு உரிய தானியம் மொச்சை. மகாலட்சுமிக்கு உரிய பொருள் ஏலக்காய். அதேபோல வெள்ளை நிற மல்லிகைப்பூ வாசம் நிறைந்தது, இதுவும் சுக்கிர பகவானுக்கும் மகாலட்சுமிக்கு உரியதுதான்.இந்த பொருட்கள் எல்லாம் நாளை பூஜைக்கு தேவை. இதில் உங்களுடைய வீட்டில் எது இருக்கிறதோ அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். கிடைக்காத பொருளை நினைத்து கவலைப்பட வேண்டாம்.

தை மாத வெள்ளிக்கிழமைகளில், அம்பாள் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில், சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள் நடைபெறும். தை மாத வெள்ளிக்கிழமையில், அம்மன் கோவிலுக்குச் சென்று அம்மனை வணங்கினால் நம்மையும், நம் குடும்பத்தையும் தழைக்கச் செய்வார்.எப்படி ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்கிறோமோ, அதே போல் ஒவ்வொரு மாதமும் செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும் அம்பிகைக்கு உரிய அற்புதமான நாட்கள். அதனால் தான் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மகாசக்தி குடிகொண்டிருக்கும் தலங்களில் பெண்கள் முதலான பக்தர்கள் பலரும் வணங்கி வழிபடுகிறார்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *