இது’ தெரியாம ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டாம்.. ரொம்ப முக்கியம் பாஸ்..!!
ஒரு ஹெல்த் இன்சூரனஸ் பாலிசியை வாங்குவதற்குள் பலருக்கும் பைத்தியமே பிடித்து விடுகிறது. எல்லா கம்பெனிகளும் பல விதமான ரூல்ஸ்களையும், ஆஃபர்களையும் தருவதால் எதைத் தேர்வு செய்வது என்ற குழப்பம் வாடிக்கையாளர்களுக்கு வந்துவிடுகிறது.
ஒருவர் எடுக்கும் லைப் இன்சூரன்ஸோ, ஹெல்த் இன்சூரன்ஸோ அல்லது வேறு வகையான இன்சூரன்ஸோ, ஒவ்வொன்றுக்கும் தொடர்பான சில வார்த்தைகளை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. எதிர்பாராத சமயங்களில் நிகழும் அசம்பாவிதங்களின்போது ஏற்படும் பணச்சுமையைத் தடுப்பதே இன்சூரன்ஸ் பாலிசியின் நோக்கமாகும். இருப்பினும் அந்த பாலிஸி தொடர்பாக பயன்படுத்தப்படும் சில வார்த்தைகள் அல்லது வாசகங்கள் குறித்து வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் கேட்டறிந்து கொள்வது அவசியமாகும். இது பற்றி ஆன்சூரிட்டி கம்பெனி நிறுவனரும் சிஇஓவுமான யோகேஷ் அகர்வால் கூறுகையில், பல பாலிஸிகளில் குறிப்பிட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை பற்றி இங்கு விரிவாகப் பாருங்கள். சம் இன்சூர்டு: ஒரு இன்ஸ்சூரன்ஸ் பாலிசியின் அடித்தளமே அது எந்தளவு தொகைக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்பதுதான். இதை கவரேஜ் லிமிட் அல்லது பாலிஸி லிமிட் என்பார்கள். பாலிஸி காலம், இன்ஸ்சூரன்ஸ் வகையைப் பொருத்து முன்கூட்டியே ஒரு தொகையை இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்கள் வகுத்து வைத்திருக்கும். ஒருவருக்குப் இப்படிப்பட்ட பாலிஸிதான் பொருந்தும் என்றெல்லாம் வரையறுக்க முடியாது. அவரவர் தேவைக்கேற்ப பாலிஸியை ஒருவர் தேர்ந்தெடுக்க வேண்டும். ஹெல்த் இன்ஸ்சூரன்ஸை எடுத்துக் கொண்டால் ஹாஸ்பிடல் தேர்வு என்பது மிக முக்கியமான அம்சமாகும். மெட்ரோ நகரங்களில் மருத்துவச் செலவு அதிகமாக இருக்கும். இதுவே சிறிய நகரங்கள் என்றால் குறைவாக இருக்கும். எனவே அதன் அடிப்படையில் தேவையான தொகைக்கு பாலிஸியை எடுக்க வேண்டும். ஹெல்த் இன்ஸ்சூரன்ஸ் பாலிஸிகளை காலம் தாழ்த்தி எடுக்கக் கூடாது. இளம் வயதிலேயே பாலிஸியை எடுத்தால் அதற்காக செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை குறைவாக இருக்கும். போகப்போக கூடுதல் சலுகைகளும் கிடைக்கும். கோ-பே: பல பாலிஸிகளில் கோ-பேமெண்ட் என்ற ஆப்ஷன் இருக்கும். அதன்படி செலவாகும் தொகையில் ஒரு பகுதியை இன்சூர் செய்த நபர் செலுத்த வேண்டியிருக்கும். எடுத்துக் காட்டாக, மருத்துவச் செலவு ரூ.20000 ஆகிவிட்டது என்றால் அதில் 10 சதவீதமான ரூ.2000 ஐ இன்சூர் செய்து கொண்டவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்.