தமாகா+பாஜக கூட்டணி? வெளியான முக்கிய தகவல்.!!
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் திறந்த தமிழ் மாநில காங்கிரஸ் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்ற குழப்பத்தில் இருந்து வருகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணி அங்கம் வகித்திருந்த நிலையில் தற்போது கூட்டணியில் இருந்து வெளியேறியது.
இதன் காரணமாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுக கூட்டணியில் இணைவதால் அல்லது பாஜக கூட்டணியில் இணைவதா என்று குழப்பத்தில் உள்ளது இது தொடர்பாக கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் ஜி.கே வாசன்.
இந்நிலையில் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்ற அறிவிப்பை நாளை ஜிகே வாசன் அறிவிக்கவுள்ளார். பாஜக தலைமையிலான கூட்டணியில் ஜி கே வாசன் இணைய அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.