தமிழ் அனுமன் ஜெயந்தி: தேதி, நேரம், வழிபாடு, முக்கியத்துவம் தெரிந்துகொள்ளுங்கள்!
தமிழகத்தில் மார்கழி மாத அமாவாசை தினத்தில் ஹனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. தமிழ் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படும் தேதி, நேரம், வழிபாடு, அதன் முக்கியத்துவத்தைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
அனுமன் ஜெயந்தி இந்து மதத்தில் மிகப் பெரிய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படும் அனுமன் ஜெயந்தி தமிழகத்திலும் கொண்டாடப்படுகிறது. தமிழ் அனுமன் ஜெயந்தி விழா, மூலம் நட்சத்திரத்துடன் தொடர்புடையது.
தமிழகத்தில் மார்கழி மாத அமாவாசை தினமாக ஜனவரி 11 ம் தேதி இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. ஜனவரி 10-ம் தேதி இரவு 08.05 மணி துவங்கி, ஜனவரி 11-ம் தேதி மாலை 06.31 வரை அமாவாசை திதி உள்ளது. அதே நேரம், ஜனவரி 10-ம் தேதி இரவு 07.44 வரை மட்டுமே மூல நட்சத்திரம் உள்ளது.
வானர கடவுள் என்று அழைக்கப்படும் அனுமன் பிறந்ததைக் குறிக்கும் சைத்ரா மாத பௌர்ணமி நாளில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
ஆனால், பிராந்திய நம்பிக்கைகள் மற்றும் நாட்காட்டி வகைகளின் அடிப்படையில் வருடத்தின் பல்வேறு நேரங்களில் பக்தர்கள் இந்த மங்களகரமான நிகழ்வைக் கடைப்பிடிக்கின்றனர். வட இந்திய மாநிலங்களில், சைத்ரா பூர்ணிமாவின் போது அனுமன் ஜெயந்தி மிகவும் பரவலாகக் கொண்டாடப்படுகிறது.
த்ரிக் பஞ்சாங்கத்தின்படி, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், அனுமன் ஜெயந்தி 41 நாட்கள் நீடிக்கும், இது சைத்ரா பூர்ணிமாவில் தொடங்கி வைஷாக மாதத்தில் கிருஷ்ண பக்ஷத்தின் பத்தாம் நாளில் முடிவடைகிறது.
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பக்தர்கள் சைத்ரா பூர்ணிமாவில் இருந்து தொடங்கி அனுமன் ஜெயந்தி நாளில் முடிவடையும் 41 நாள் தீக்ஷையை மேற்கொள்கின்றனர்.