தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகும் தமிழக டி.ஜி.பி மகள் தவ்தி ஜிவால்!
இயக்குனர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில், ஜீவா நடிக்கும் புதிய படத்தில் தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
இயக்குனர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில், ஜீவா நடிக்கும் புதிய படத்தில் தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
நடிகர் கவின் நடிப்பில், கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் டாடா. இந்த படத்தை இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்கியிருந்தார். டாடா படம் வெற்றி பெற்றதையடுத்து, கவின் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் பட வாய்ப்புகள் குவிந்தன.
அந்த வகையில், இயக்குனர் கணேஷ் கே. பாபுவிற்கும் அடுத்த படம் கிடைத்தது. இந்த படத்தில் துருவ் விக்ரம் நடிப்பதாக கூறப்பட்டது. இவருக்கு ஜோடியாக தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், அந்த படம் தொடங்கப்படாமலேயே கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், இயக்குனர் கணேஷ் கே. பாபுவின் புதிய திரைக்கதையுடன் இயக்க உள்ள புதிய படத்தில் தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் ஹிரோயினாக அறிமுகமாக உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஜீவா ஹீரோவாக நடிக்கிறார்.
டி.ஜி.பி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நடிக்கும் படத்தின் பெயர், ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், டி.ஜி.பி சங்கர் ஜிவால் மகள் தவ்தி ஜிவால் நடிக்கும் புதிய படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இப்போதே அதிகரித்துள்ளது.
முன்னதாக தவ்தி ஜிவால், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ‘எரிமலையின் மகளே என்ற இசை வீடியோவில் இடம்பெற்றிருந்தார்.