தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மருத்துவமனையில் அனுமதி..!
2021 சட்டமன்ற தேர்தலில் முன்னாள் அமைச்சர் சரோஜாவை தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் மதிவேந்தன்.
இதையடுத்து சுற்றுலாத்துறை அமைச்சராக பதவியேற்றார். அதன் பின்னர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றபோது பல அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டன. அதில் மதிவேந்தனுக்கு வனத்துறை ஒதுக்கப்பட்டது, இவரிடமிருந்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனுக்கு ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் அமைச்சர் மதிவேந்தனுக்கு குடலிறக்கம் இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்த அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் ஆலோசனை கூறினார். அதைத் தொடர்ந்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் மதிவேந்தனுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது.
தற்போது மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் இருக்கிறார். அமைச்சர் பூரண நலத்துடன் இருப்பதாகவும், அவர் இன்று அல்லது நாளை வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.