தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு : முதல்வர் ஸ்டாலின்..!

தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை நான்கு சதவீதம் அதிகரிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அகவிலைப்படி அதிகரிப்பு ஜனவரி 1 2024 முதல் செயல்படுத்தப்படும். தற்போது தமிழக அரசு ஊழியர்கள் 46 சதவீத அகவிலைப்படியை பெற்று வருகிறார்கள்.

அகவிலைப்படி தற்போது நான்கு சதவீதம் உயர்ந்துள்ள நிலையில் மாநில அரசு ஊழியர்களின் (State Government Employees) மொத்த அகவிலைப்படியும் ஓய்வூதியதாரர்களின் (Pensioners) அகவிலை நிவாரணமும் 50 சதவிகிதமாக உயரும். இந்த உயர்வுக்கு பிறகு, சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். இந்த அதிகரிப்பின் காரணமாக அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு சுமார் 2587.91 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.

இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் (Lok Sabha Election) நடக்கவுள்ள நிலையில் மாநில அரசு இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை மாநில அரசு ஊழியர்களுக்கு (State Government Employees) வழங்கியுள்ளது. இதற்கான அறிவிப்பினை முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தும் பல முன்னோடித்திட்டங்களை நாடே வியந்து பார்க்கும் வகையில் நடைமுறைபடுத்துவதில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கை இந்த அரசு நன்கு உணர்ந்துள்ளது. கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையே அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிதி நிலைமைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றுவதில் இந்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை மாண்புமிகு முதலமைச்சர் கனிவுடன் பரிசீலித்து, 01.07.2023 முதல் ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதைப் பின்பற்றி அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கிட அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

அவ்வகையில், ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு 01.01.2024 முதல் 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 50 சதவீதமாக உயர்த்தி வழங்கிட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், மாநில அரசு பணியாளர்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் 46 அவர்கள் சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி 50 சதவீதமாக 01.01.2024 முதல் உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்கள். இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூபாய் 2587.91 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *