இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் டாப்பு.. முதலீட்டாளர்கள் மாநாட்டில் சஜ்ஜன் ஜிண்டால் மாஸ் பேச்சு..!!

தமிழ்நாடு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இனிதே துவங்கியது மட்டும் அல்லாமல் ஆரம்பமே அதிரடி என்ற வகையில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனர் பாவிஷ் அகர்வால் ஓலாவின் கிருஷ்ணகிரி தொழிற்சாலையின் வெற்றியில் தமிழ்நாடு அரசின் பங்கீடு குறித்தும், அவருடைய மனைவி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதையும் பெருமையாகக் கூறினார்.
டாடா எலக்ட்ரானிக்ஸ் தமிழகத்தில் ₹12,082 கோடி முதலீடு செய்ய உள்ளதாகவும், பெகாட்ரான் ₹1,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாகவும், டிவிஎஸ் நிறுவனம் அதன் விரிவாக்கத் திட்டங்களுக்காக ₹5000 கோடி முதலீடு செய்யவுள்ளதாகவும் அறிவித்துத் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த அறிவிப்பு வெளியானது. இதன் பின்பு பேசி JSW குழுமத்தின் நிர்வாகத் தலைவர் சஜ்ஜன் ஜிண்டால், இந்தியாவிலேயே அதிகத் தொழிற்சாலைகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு என்ற உண்மை சர்வதேச முதலீட்டாளர்கள் முன்னிலையில் தெரித்தார். மேலும் சஜ்ஜன் ஜிண்டால் பேசுகையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் அதிகத் தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலமாக உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 35000க்கும் அதிகமான தொழிற்சாலைகள் உள்ளது, இது நாட்டின் மொத்த தொழிற்சாலைகளில் பெரும் அளவீடு என்றும் தெரிவித்தார். இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாவது பெரிய பொருளாதாரம். தமிழ்நாடு அரசின் கொள்கை கட்டமைப்பு, தொழிலாளர் சக்தி வாயிலாக $1 டிரில்லியன் பொருளாதார இலக்கை அடைய முடியும். அரசாங்கங்கள் மாறிய போதிலும், கொள்கைகள் தொழில்துறை நட்புடன் இருப்பதாகச் சஜ்ஜன் ஜிண்டால் கூறுகினார். சரி உண்மையிலேயே மக்களுக்கு என்ன நன்மை? சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் அடிப்படையாக நாம் பெறுவது முதலீடு, ஆனால் இது வெறும் துவக்கப்புள்ளி மட்டுமே. இத்தகைய மாநாட்டின் மூலம் முதலீட்டின் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும், இதனால் தமிழ்நாட்டு மக்களின் per capita income எனப்படும் தனிநபர் வருமானம் அதிகரிக்க வழி வகுக்கும், தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் பெரிய அளவில் மேம்படும்.