Tamil News Live Today: சீனாவில் நள்ளிரவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… டெல்லியிலும் உணரப்பட்டது!

சீனாவில் நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கம்… டெல்லியிலும் உணரப்பட்டது!

நிலநடுக்கம்சீனாவின் தெற்கு ஜின்ஜியாங் பகுதியில் நேற்று நள்ளிரவு 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனால் கட்டடங்கள் அதிர்ந்தது. பூமிக்கடியில் சுமார் 80 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் மக்கள் அச்சமடைந்து சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். இதனிடையே சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம், இந்தியாவின் டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளிலும் உணரப்பட்டது.

அயோத்தியில் குவிந்த பக்தர்கள்… அதிகாலையிலே தள்ளுமுள்ளு!

அயோத்தி ராமர் கோயிலில் நேற்று பால ராமர் சிலை பிராண் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், முதல்வர் யோகி ஆதித்தியநாத் ஆகியோர் முன்னிலையில் இந்த நிகழ்வு பிரமாண்டமாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று(23-01-2024) காலை 7 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை முதலே அயோத்தி ராமரை தரிசிக்க பக்தர்கள் குவிந்தனர். இதனால் ராமர் கோயில் பகுதியில் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சில பக்தர்கள் கீழே விழ, காயமும் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *